Wednesday, September 26, 2007

உலககோப்பை - இருபது இருபது

Heroes one and all

போனா வராது போழுதுபட்டா கிடைக்காது ங்குற மாதிரி, இதோ நாம் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம், இந்தியாவின் கைகளில் உலககோப்பை.இந்நேரத்தில் நமது அணியை மனமார வாழ்த்துவோம். இது தொடர்பாக எனக்கு வந்த இமெயில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து டோனி யின் உரை இடம்பெற்றிருந்தது. அதிலிருந்து சில... ( ரவி சாஸ்திரியும், டோனியும் - கற்பனை)

ரவி: வாழ்த்துக்கள டோனி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று நினைக்கிறீர்க்ள்?

டோனி:( யோசிக்காமல்) இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் , அஜித் அகர்கர்தான்.

ரவி: அவர் விளையாடவே இல்லையே?

டோனி: அதுதான் முக்கியகாரணம். அவர் மட்டும் விளையாடியிருந்தா அவரோட 4 ஓவரிலேயே பாக்கிஸ்தான் ஜெயிச்சுருக்கும். .....சத்தமாக Thanks to Agarkar.

ரவி: ya u r right. யாருக்கு நீங்க நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?

டோனி: சச்சின், டிராவிட் மற்றும் கங்குலி.

ரவி: Oh.. I am very proud of you. அவர்களுடைய வழிகாட்டுதலுக்காகவா?

டோனி: அட போங்க சார், முனு பேரும் இருந்திருந்தா லீக்குலேயெ வெளில வந்திருப்போம். அப்புறம் எங்க விட்டுலைல கல்லவிட்டு அடிப்பாங்கே... இப்ப எங்க வீடு தப்பிச்சுது..

ரவி: ok fine. இந்திய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புரிங்க?

டோனி: மக்களே... இத எல்லாரும் ரொம்ப நாளைக்கு ஞாபகம வச்சுக்கணும். மறந்துர கூடாது. அடுத்த மேட்சில தோற்றா கூட திட்டக்கூடாது, நாங்க பாவம....

கோப்பையை வாங்கிக்கொண்டு வந்து அகர்கரை கட்டி அணைக்கிறார் டோனி.


Sunday, September 23, 2007

நல்ல செய்தி

கீழ இருக்குற Prayer ஐ படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வ்ந்திராதீங்க. நானும் உங்கள மாதிரிதான். சரி விஷையத்துக்கு வர்ரேன். இந்த காலத்துல
பணக்கார பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டு மாப்புளைங்களை கல்யாணம் செய்துகிராங்க.. படிச்ச பொண்ணுங்க Software மாப்ளைதான் வேணும்னு அடம் புடிக்கிறாங்க... Teacher பொண்ணுங்க வாத்தியாரா பாத்துகுதுங்க.. அப்ப நாமெல்லாம் என்னதான் செய்யுரதுன்னு பொலம்பிகிட்டு இருக்கிற எல்லாருக்கும் ஒரு Good News.
ரஷ்யாவுல பிறப்பு விகிதம் கம்மியாயிகிட்டெ வருதாம். இத சரி பண்றதுக்கு சரியான ஆட்கள் இந்தியர்கள் தான் கண்டுபிடிச்சுட்டாங்க. ரஷ்ய பொண்ணுங்களுக்கு இந்திய மாப்புளைங்களை தேட ஆரம்பிச்சுருக்காங்களாம்.
ரஷ்யா நம்க்கு எவ்ளவோ உதவி இருக்காங்க. அதனால போனாபோவுது இந்த உதவியை நாம செய்வோம். நிங்க என்ன நெனைக்கிறிங்க?...... ஹலோ application வாங்குனிங்கன்னா மறக்காம எனக்கு ஒன்னு அனுப்புங்க...

Prayer for you

நண்பர்களுக்கு என் முதல் வணக்கம். முதன்முதலா ஆரம்பிக்கிரோம் , ஒரு Prayer சொல்லி தொடங்குவோமா..

இறைவா என்னை உன் அமைதியின் கருவியாக மாற்றியருளும்.

எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,

எங்கு மன வருத்தமுள்ளதோ அங்கு மன்னிப்பையும்,

எங்கு ஐயம் உள்ளதோ அங்கு நம்பிக்கையும்,

எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,

எங்கு துன்பம் உள்ளதோ அங்கு இன்பத்தையும்

யான் பரப்பிட அருள் தாரும்.

நான் ஆறுதலை தேடி அலைவதை விட்டுவிட்டு

மற்றவர்களுக்கு ஆறுதலை கொடுக்க விழைவேனாக..

என்னை பிறர் நெசிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு

நான் பிறரை நெசிக்க கற்றுக்கொள்வேனாக..

மற்றவர்கள் என்னை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு

மற்றவர்களை நான் புரிந்துகொள்ள விழைவேனாக..

நிங்கள் எந்த சமையத்தை சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் முருகனிடமோ, அல்லாவிடமோ, இயெசுவிடமோ இப்படி கெட்டுப்பாருங்கள். அன்றைய தினம் சுகமாய் அமையும்.

Thursday, September 20, 2007

Thiruvalluvar at Kanniyakumari

திருக்குறள் மறந்து போய் எத்தனையோ நாள் Class. க்கு வெளில நின்னுருக்கொம்.. ஆனா இவரை யார் இப்படி நிக்கச்சொன்னது?... என்ன கொடுமை சார் இது?