Thursday, November 29, 2007
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்
கடன் சுமை, நஷ்டம் இரண்டுமே இன்றைய விவசாயத்தின் முக்கிய அங்கங்களாகிவிட்டன.
எனது சொந்தவூர் நாகை மாவட்டத்தில் உள்ளது. பருவமழையும், காவிரியும்தான் இங்கு விவசாயத்திற்கான முக்கிய மூலங்கள். காவிரி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சில வருடங்களாக பருவமழையும் பொய்த்துவிட்டது. தேவையான நேரத்தில் ஒரு சொட்டு கூட பெய்வதில்லை. நன்றாக கதிர்வரும்போது பேய் மழை பெய்கிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்போது உள்ள முக்கிய பிரச்சினை விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வரமறுக்கிறார்கள் என்பதுதான். ஆம் கட்டிட வேலைகளுக்குச்சென்றால் இதைவிட இருமடங்கு வருமானம் கிடைப்பதால் விவசாய வேலைகளை தவிர்த்துவிடுக்கிறார்கள். எனவே பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாகவே இருக்கின்றன. ( யாராவது டாடா கம்பெனி காரங்ககிட்ட சொல்லுங்கப்பா..)..
இன்னும் கொஞ்சநாட்களில் அரிசி, தக்காளி, கீரை இதையெல்லாம் பெப்சி, கோக் மாதிரி புட்டிகளில் அடைச்சு வெளிநாட்டுகாரங்க நம்மகிட்ட விற்கப்போகிறார்கள்.
சரி இப்ப அதுக்கு என்னங்குறிங்களா? .. விக்ரமன் படத்துல வர்ர மாதிரி ஒரே பாட்டுல எல்லா தரிசு நிலத்தையும் விளைநிலமாகவோ.. இல்ல நஷ்டத்த லாபமாகவோ நம்மால மாத்தமுடியாது. ஏதோ நம்மாள முடிஞ்சது,
வெளியூர்ல, வெளிநாடுகள்ல நல்லா சம்பாதிக்கிற நாம , ஊர்ல இருக்குற நிலத்தையெல்லாம் வித்துடுங்கன்னு அப்பாக்கள டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.
விவசாயத்துக்காக கொஞ்சம் செலவு செய்யலாம்.
வேற ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்க..
Monday, November 26, 2007
சேதி தெரியுமா?

அதாவது மகளீர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மட்டும் படிக்கலாம்னு சட்டம் இருக்குதாம்.( நம்ம நாட்டுலதான்...) அதுக்கு கல்லூரி முதல்வரோட அனுமதி மட்டும் இருந்தால் போதுமாம். இதுதான் படத்தோட கரு.
இந்தபுது சட்டத்தோட கருணையால பிரித்திவிராஜ்க்குஅந்த யோகம் கிடைக்குது.அதுக்கப்ப்புறம் காலேஜ்ல நடக்குற விஷயங்ள், இத வச்சு திரைக்கதையை அமைச்சுருக்காங்க.. மொத்தத்துல படம் நல்லாயிருக்கு.

தமிழக இளைஞர்களின் எதிபார்ப்புக்கு ஏற்றமாதிரி ரெண்டு கதாநாயகிகள் நடிச்சிருக்காங்க. தமிழ்ல சீக்கிரம் எதிபார்க்கலாம். ஆயிரம் ஆண்கள் இருக்குற இடத்துல இருந்துறலாம், ஆனா ரெண்டு பொண்ணுங்க இருக்குகிற இடத்துல இருக்கமுடியாதுங்குறத ( சத்தியமா நான் சொல்லலைங்க..) பிரித்திவிராஜ் படம் முழுக்க அனுபவிக்கிறார்.
ம்ம்.. நமக்குத்தான் குடுத்து வைக்கல வரப்போற பசங்களுக்காவது பயன்படட்டுமேன்னு தான் உங்க எல்லார்கிட்டேயும் இத சோன்னேன்.
உண்மையாவே இப்படி ஒரு சட்டம் இருக்குதான்னு விசாரிச்சுப்பாருங்க..
Thursday, November 15, 2007
Monday, November 12, 2007
எவ்வளவோ பண்றோம்.. அழகிய தமிழ்மகன்

Thursday, November 1, 2007
கடவுளின் சொந்த நாடு II
மழை மாதிரியே இங்க அடிக்கடி போராட்டங்களும் நடக்கும். ஸ்ட்ரைக் அப்புடிங்குற்த இவுங்க "ஹர்த்தால் " னு சொல்ராங்க. எல்லா கட்சிகளுமே ஹர்த்தால் பண்றத்துக்குன்னே தனி ஆளுங்கள அப்பாயின்ட் பண்ணி
வச்சுருக்காங்க.அரசு தலைமைச்செயலகத்துக்கு வெளில டெண்டு போட்டு இந்த ஆளுங்க தயாரா இருப்பாங்க, ரெடின்னு சொன்னதும் ரொட மறிச்சு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க.
தமிழ் திரைப்படங்களுக்கு இங்க நல்ல வரவேற்பு இருக்கு. புதுப்படம் வந்தாக்கூட டிக்கெட் விலையெல்லாம் நியாயமாதான் இருக்கும். டாக்டர் விஜய் நடித்த போக்கிரி 100 நாள் ஓடிச்சுன்னா பாத்துகங்க.. கோயில் திருவிழாவிலெல்லாம் தெரு முழுக்க ஸ்பீக்கர் கட்டி , " டோலு டோலு தான் அடிகுறான்" னு பாட்டப்போட்டு நம்ம காது கிழியுற அளவுக்கு கத்த விடுவாங்க.
திருவனந்தபுரத்துல முக்கியமா பார்க்கவேண்டிய இடங்கள்,

சுவாமி பத்பநாபா கோவில். பேருந்து நிலையத்திலிருந்து 1/2 மைல் தொலைவில் இருக்குகிறது

கோவளம் கடற்கரை.
கேரளாவுல இருக்குற கடற்கரைகள் எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கும். இந்த கடற்கரைகளை பார்ப்பதற்காகத்தான் வெளிநாட்டினர் நிறைய பேர் வருகிறார்கள்.
சூரியக்குளியல், மணல்குளியல் எல்லாம் நிறைய பார்க்கலாம். இதே போல் சங்குமுகம், வேலி போன்ற கடற்கரைகளும் பார்க்கவேண்டிய இடங்கள்.

திருவனந்தபுரத்துல ஒரு மிருகக்காட்சி சாலையும் , அருங்காட்சியகமும் இருக்கு.
அரிய விலங்குகளை இங்கு பார்க்கலாம்.
திருவனந்தபுரத்துக்கு இன்னொரு சிறப்பு, இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம். இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பா என்ற இட்த்தில் உள்ளது. பெரும்பாலான விஞ்ஞானிகள், நம் அப்துல் கலாம் உட்பட இங்குதான் தன் பணியை தொடங்கியிருக்கிறார்கள்."நைக் அப்பாச்சி" என்ற ராக்கெட்டை தும்பாவிலிருந்து விண்ணில் செலுத்துவதற்காக தயார் செய்துகொண்டிருக்கும் படத்தைத்தான் அருகில் பார்க்கிறீர்கள்.
கேரளாவுக்கு சுற்றுலா வந்தீங்கன்னா, கீழே இருக்குற சொற்கள் கொஞ்சம் உதவியா இருக்கும்.
தேனீர் (Tea) :சாயா
சாம்பார் : சாம்பார்
வத்தல்குழம்பு : தீயல்
ரசம் : இரெசம்
பருப்பு : பெருப்பு
மோர்குழம்பு : புளிசேரி.
ஊறுகாய் : அச்சாரம்.
போதும் : மதி
வெங்காயம் : உள்ளீ
சொல் : பறை
கூப்பிடுகிறேன :விளிக்கே
ஆள் : புள்ளி
வேலை : ஜோலி.
இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லுவேன். இன்னமும் தெரிஞ்சுக்கனும்னா என்கிட்ட டியுஷன் சேருங்க..
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், பொதுவா சொல்லனும்னா திருவனந்தபுரம் ஒரு அருமையான சுற்றுலாத்தலம். நேரம் கிடைக்கும்போது கடவுளிடைய சொந்த நாட்டுக்கு கண்டிப்பா வாங்க..
Tuesday, October 30, 2007
கடவுளின் சொந்த நாடு - 1
திருவனந்தபுரம்தான் கேரளாவோட தலைநகரம் னு சொல்லிகிறாங்க, ஆனா அதுக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம். தம்பானூர் என்ற

Monday, October 29, 2007
அறிமுகம்
என்னைப்பற்றி எந்தவித அறிமுகமும் கொடுக்காமல் ஏனோதானோ என்றுதான் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். ஆனால் இப்போதுதான் இதன் முக்கியத்துவமும் , வலிமையும் எனக்கு புரிகின்றன.எனது சொந்தவூர் வேளாங்கண்ணி. தற்போது திருவனந்தபுரத்தில் , ஒரு ஆங்கில பத்திரிக்கையின் தொழில்நுட்ப பிரிவில் வேலைப் பார்கிறேன், இவ்வளவுதாங்க நான்.
வலைப்பதிவுகளை எனக்கு அறிமுகம் செய்த விஜய் அவர்களுக்கும், இதை மேன்படுத்துவதற்கு உதவிய மங்களூர் சிவா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எத்தனையோ சுவையான செய்திகள், காரசாரமான விவாதங்கள் இத்தகைய வலைப்பதிவுகளில் உலா வருகின்றன. என்னுடைய எண்ணங்களை உங்கள்முன் எதிரொலிக்க இந்தக்கண்ணாடியைப் நான் பயன்படுத்தப்போகிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து முகம் காட்டிச்செல்லுங்கள். அப்படியே என்னையும் கூட்டிச்செல்லுங்கள் உங்கள் வலைப்பயணங்களில்......
நேசமுடன்,
அ.ரூபஸ். (சத்தியமா நான் தமிழ்நாடுதான்)
Friday, October 19, 2007
தொல்லை பேசி

முன் பெஞ்சில் அமர்ந்திருக்கிற நண்பனுக்கு குறுந்தகவலோ, தூரத்தில் இருக்கும் தோழிக்கு புதுப்பாடலின் இசையையோ இனி பள்ளிக்கூடத்திலிருந்து அனுப்ப இயலாது.
பள்ளிக்கூடங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் செல் பேசியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.
தலைக்கவசம் அணிய வேண்டுமென்று ஒரு சட்டம் கொண்டுவந்து, குட்டையாக குழப்பினார்களே அதுபோல் இல்லாமல், கொஞ்சம் கடுமையாக நடைமுறைக்கு கொண்டு வந்தால் நலமாயிருக்கும்.
Sunday, October 14, 2007
உறக்கமும், சோம்பலும்
தூக்கம் என்பது கண்களின் தர்மம்ஆனால் சோம்பல் என்பது ஒருவகையான தற்கொலை
தூக்கத்தில் சொறிந்து கொள்வது மாதிரி
சோம்பலென்பது ஒரு தற்காலிக சுகம்,
விழித்துப் பார்த்தால் அதுவே ரத்தம் கசியும்
ரணமாகவும வாய்ப்பிருக்கிறது,
நேரத்தை ஒத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிஷத்திலும்
உனது வெற்றி ஒத்திவைக்கப்படுகிறது
நாளை என்று தள்ளிப்போடும் நாளெல்லாம் உன் எதிர்காலம்
இறந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது.
-கவிஞர் வைரமுத்து
("சிற்பியே உன்னை செதுக்குகிறேன்")
Monday, October 1, 2007
காந்தி பிறந்தநாள்

அக்டோபர் இரண்டு மகாத்மாவின் பிறந்தநாள். குடிமக்கள் கொண்டாடுகிறார்கள், குடிமகன்கள் திண்டாடுகிறார்கள் மதுக்கடை கட்டாய விடுமுறை என்பதால். அது போகட்டும்.. என்னைக்கவர்ந்த காந்தியின் பொன்மொழிகளில் சில உங்கள் பார்வைக்காக இதோ...
- Freedom is not worth having if it does not include the freedom to make mistakes .
- Hate the sin, love the sinner
- I object to violence because when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent
- An eye for an eye makes the whole world blind
- You must not lose faith in humanity. Humanity is an ocean, if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.
- The weak can never forgive. Forgiveness is the attribute of the strong
Saturday, September 29, 2007
Microsoft Secret
Microsoft OS ல CON அப்புடின்னு ஒரு Folder உருவாக்க முடியாதுன்னு எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க, அது உண்மைதான். ஏன் முடியாது என்றால்...
முதன்முதலில் Microsoft ன் DOS ( Disk Operating System) க்கான மென்பொருள் எழுதும்போது கணிப்பொறியின் பாகங்களை குறிப்பதற்காக சில பிரத்தியேகமான பெயர்களை( Reserved Names) பயன்படுத்தினர். உதாரணமாக தட்டச்சுப்பலகையும்( Keyboard), திரையும்( Screen) CON அதாவது Console எனவும், Printer, PRN எனவும் குறிக்கப்பட்டன.
நாம் DOS ல் புதிய கோப்பு (File) தொடங்குவதற்கு COPY CON என்ற கட்டளையை ( Internal Command) பயன்படுத்துவோம். இங்கு Copy என்பது நகல் எடுப்பதை குறிக்கிறது. Con என்பது தட்டச்சுப்பலகையையும் , திரையையும் குறிக்கிறது. நாம் தட்டச்சுப்பல்கையில் என்ன தட்டச்சு(Type) செய்கின்றோமோ அதை திரையில் எதிரொலிக்க (Echo) வேண்டும் என்பதே அந்த கட்டளையின் பொருள்.
CON என்ற பிரத்தியேக வார்த்தை இதுபோன்ற கட்டளைகளில் பயன்படுத்தப்படுவதாலும, ஏற்கனவே குறிக்கப்பட்டிருப்பதாலும்தான் நம்மால் CON என்ற பெயரில் புதிதாக ஒரு Folder ரை உருவாக்க முடியவில்லை என்பது எனது கருத்து.
Printer ரை குறிக்கும் PRN என்ற பெயரில் கூட புதிதாக ஒரு Folder ரை உருவாக்க முடியாது. முயற்சித்துப் பாருங்கள். தவறு ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.
Thursday, September 27, 2007
காணமல் போன கைபேசி
வடிவேலு சொல்லுறமாதிரி நூதனமாத்தான்யா திருடுராங்கெ.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ.... உங்களுக்கு இந்த நிலமை வராம கொஞ்சம் உஷாரா இருங்க...
Wednesday, September 26, 2007
உலககோப்பை - இருபது இருபது
போனா வராது போழுதுபட்டா கிடைக்காது ங்குற மாதிரி, இதோ நாம் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம், இந்தியாவின் கைகளில் உலககோப்பை.இந்நேரத்தில் நமது அணியை மனமார வாழ்த்துவோம். இது தொடர்பாக எனக்கு வந்த இமெயில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து டோனி யின் உரை இடம்பெற்றிருந்தது. அதிலிருந்து சில... ( ரவி சாஸ்திரியும், டோனியும் - கற்பனை)
ரவி: வாழ்த்துக்கள டோனி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று நினைக்கிறீர்க்ள்?
டோனி:( யோசிக்காமல்) இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் , அஜித் அகர்கர்தான்.
ரவி: அவர் விளையாடவே இல்லையே?
டோனி: அதுதான் முக்கியகாரணம். அவர் மட்டும் விளையாடியிருந்தா அவரோட 4 ஓவரிலேயே பாக்கிஸ்தான் ஜெயிச்சுருக்கும். .....சத்தமாக Thanks to Agarkar.
ரவி: ya u r right. யாருக்கு நீங்க நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?
டோனி: சச்சின், டிராவிட் மற்றும் கங்குலி.
ரவி: Oh.. I am very proud of you. அவர்களுடைய வழிகாட்டுதலுக்காகவா?
டோனி: அட போங்க சார், முனு பேரும் இருந்திருந்தா லீக்குலேயெ வெளில வந்திருப்போம். அப்புறம் எங்க விட்டுலைல கல்லவிட்டு அடிப்பாங்கே... இப்ப எங்க வீடு தப்பிச்சுது..
ரவி: ok fine. இந்திய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புரிங்க?
டோனி: மக்களே... இத எல்லாரும் ரொம்ப நாளைக்கு ஞாபகம வச்சுக்கணும். மறந்துர கூடாது. அடுத்த மேட்சில தோற்றா கூட திட்டக்கூடாது, நாங்க பாவம....
கோப்பையை வாங்கிக்கொண்டு வந்து அகர்கரை கட்டி அணைக்கிறார் டோனி.
Sunday, September 23, 2007
நல்ல செய்தி
பணக்கார பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டு மாப்புளைங்களை கல்யாணம் செய்துகிராங்க.. படிச்ச பொண்ணுங்க Software மாப்ளைதான் வேணும்னு அடம் புடிக்கிறாங்க... Teacher பொண்ணுங்க வாத்தியாரா பாத்துகுதுங்க.. அப்ப நாமெல்லாம் என்னதான் செய்யுரதுன்னு பொலம்பிகிட்டு இருக்கிற எல்லாருக்கும் ஒரு Good News.
ரஷ்யாவுல பிறப்பு விகிதம் கம்மியாயிகிட்டெ வருதாம். இத சரி பண்றதுக்கு சரியான ஆட்கள் இந்தியர்கள் தான் கண்டுபிடிச்சுட்டாங்க. ரஷ்ய பொண்ணுங்களுக்கு இந்திய மாப்புளைங்களை தேட ஆரம்பிச்சுருக்காங்களாம்.
ரஷ்யா நம்க்கு எவ்ளவோ உதவி இருக்காங்க. அதனால போனாபோவுது இந்த உதவியை நாம செய்வோம். நிங்க என்ன நெனைக்கிறிங்க?...... ஹலோ application வாங்குனிங்கன்னா மறக்காம எனக்கு ஒன்னு அனுப்புங்க...
Prayer for you
இறைவா என்னை உன் அமைதியின் கருவியாக மாற்றியருளும்.
எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,
எங்கு மன வருத்தமுள்ளதோ அங்கு மன்னிப்பையும்,
எங்கு ஐயம் உள்ளதோ அங்கு நம்பிக்கையும்,
எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,
எங்கு துன்பம் உள்ளதோ அங்கு இன்பத்தையும்
யான் பரப்பிட அருள் தாரும்.
நான் ஆறுதலை தேடி அலைவதை விட்டுவிட்டு
மற்றவர்களுக்கு ஆறுதலை கொடுக்க விழைவேனாக..
என்னை பிறர் நெசிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு
நான் பிறரை நெசிக்க கற்றுக்கொள்வேனாக..
மற்றவர்கள் என்னை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு
மற்றவர்களை நான் புரிந்துகொள்ள விழைவேனாக..
நிங்கள் எந்த சமையத்தை சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் முருகனிடமோ, அல்லாவிடமோ, இயெசுவிடமோ இப்படி கெட்டுப்பாருங்கள். அன்றைய தினம் சுகமாய் அமையும்.


