Saturday, April 19, 2008

உன்னையெல்லாம் திருத்தமுடியாது...

கபில்தேவோட ICL க்கு போட்டியா, இந்திய கிரிக்கெட் வாரியம் IPL ன்னு பங்காளி சண்டையை ஆரம்பிச்சபோது அது ஒரு பெரிய விஷயமா தெரியல. ஆனா பெரிய பணக்காரர்களிடம் டீம்களை விற்று, விளையாடுபவர்களை ஏலம் விட்டபோது இது விளையாட்டல்ல , வியாபாரம் என்று புரிந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும், ரட்சகன் படத்துல நாகார்ஜுனுக்கு நரம்பு புடைக்குமே , அதுமாதிரி என்க்கும் என் நண்பர்களுக்கும் உடம்பெல்லாம் நரம்பு புடைத்தது. நாமெல்லாம் வாயை திறந்துகிட்டு டிவி பார்க்கிறதுனாலதான் இவங்கல்லாம் இப்படி பண்றாங்க என்று கொதித்தார் ஒரு நண்பர். IPL மேட்ச நாம யாரும் பார்க்ககூடாதுன்னு பேசி முடிவு பண்ணினோம். கிட்டத்தட்ட சபதம்ன்னு வச்சுக்கலாம்.

நாட்கள் ந....க.....ர்....ந்....த....ன. ஏப்ரல் 18 மாலை 6 மணிக்கெல்லாம் எல்லாரும் டிவி ரூமுக்கு வந்தாச்சு. "செம கலர்ஃபுல்லா இருக்குல்ல" இது ஒரு நண்பர். "என்ன கூட்டம் பார்த்தீங்களா" இது நான். " மேட்சு எப்போ ஆரம்பிக்கும் " இது கொதித்து எழுந்தவர். இப்படி நாங்களெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது , பின்புறத்திலிருந்து யாரோ என் தலையில் குட்டினார்கள். திரும்பிப்பார்ததால் சாட்சாத் என் மனசாட்சியேதான்.. உன்னையேல்லாம் திருத்தமுடியாது என்று மீண்டும் நறுக்கென்று என் தலையில் குட்டிவிட்டு அருகில் அமர்ந்து மேட்ச் பார்க்கத்தொடங்கியது என் மனசாட்சி...

16 comments:

ரூபன் said...

நம்மல எல்லாம் திருத்த முடியாது டா,வெறும் பேச்சுதான்,உலகத்தின் போக்கிலயே போக வேண்டி இருக்கு!அதுக்கு நாம ஒன்னும் பன்ன முடியாது

பாச மலர் / Paasa Malar said...

மனசாட்சி மேட்ச் பார்க்கிற கதைதான் எதார்த்தம்..நல்லா எழுதிருக்கீங்க..

நையாண்டி நைனா said...

இதுக்கு பேரு தான் கண்ணு...
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டங்கரது....

தேன்மொழி said...

எதார்த்தமா நடந்துகிட்ட உங்க மனசாட்சிக்கும் , உண்மைய ஒத்துகிட்ட உங்களுக்கும் ஒரு சபாஷ் ..

நையாண்டி நைனா said...

எங்கப்பா..என்னோட பின்னூட்டம்,
அதையும் 60000 கோடிக்கு ஏலம் விட்டுடீங்களா??????

ரூபஸ் said...

//பாச மலர் said...
மனசாட்சி மேட்ச் பார்க்கிற கதைதான் எதார்த்தம்..நல்லா எழுதிருக்கீங்க..//

நன்றி பாசமலரக்கா.. நீங்க இருக்குற ஊர்ல IPL மேட்ச் லைவ் வருதா?..

ரூபஸ் said...

// நையாண்டி நைனா said...
இதுக்கு பேரு தான் கண்ணு...
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டங்கரது....//

ஆமா நைனா, இங்க கூத்தாடிங்க கூட ஒவ்வொரு டீமுக்கும் தனித்தனியா ஆடுறாங்களே..

ரூபஸ் said...

//Thenmozhi said...
எதார்த்தமா நடந்துகிட்ட உங்க மனசாட்சிக்கும் , உண்மைய ஒத்துகிட்ட உங்களுக்கும் ஒரு சபாஷ் ..//

வருகைக்கும் , சபாஷ்க்கும் நன்றி தேன்மொழி.. உண்மையிலேயே இந்த மேட்ச பார்க்கக்கூடாதுன்னு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

ரூபஸ் said...

//Thenmozhi said...
எதார்த்தமா நடந்துகிட்ட உங்க மனசாட்சிக்கும் , உண்மைய ஒத்துகிட்ட உங்களுக்கும் ஒரு சபாஷ் ..//

வருகைக்கும் , சபாஷ்க்கும் நன்றி தேன்மொழி.. உண்மையிலேயே இந்த மேட்ச பார்க்கக்கூடாதுன்னு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

ரூபஸ் said...

//நையாண்டி நைனா said...
எங்கப்பா..என்னோட பின்னூட்டம்,
அதையும் 60000 கோடிக்கு ஏலம் விட்டுடீங்களா??????//

நைனா சாமி, என்னையும் மதிச்சு நீங்க பின்னூட்டம் போடுரீங்க, அத எப்புடி நான் ஏலம் விடுவேன்.... அலுவலக வேலைகள் என்னை பின்னால் அழைத்ததால் .. சற்று தாமதமாகிவிட்டது.. மன்னியுங்கள் மன்னா

ரூபஸ் said...

நன்றி புலால் ச்சீ ரூபன்

தினேஷ் said...

இப்படியே எல்லாரும் இருந்தால் இந்தியால IPL-லே வடையை சுட்டு எல்லாருக்கு 1000 ருபாய்க்கு விலைக்கு விப்பானுக... அதையும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு match பார்ப்பார்கள் நம்ம ஆட்கள்...திருத்தவே முடியாது

ரூபஸ் said...

வாங்க தினேஷ், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

மங்களூர் சிவா said...

/
உன்னையேல்லாம் திருத்தமுடியாது என்று மீண்டும் நறுக்கென்று என் தலையில் குட்டிவிட்டு அருகில் அமர்ந்து மேட்ச் பார்க்கத்தொடங்கியது என் மனசாட்சி...
/

யாருப்பா அந்த சபதம் எடுத்த இன்னொரு நண்பர் ஜே.பியா???????

ரூபஸ் said...

// மங்களூர் சிவா said...
யாருப்பா அந்த சபதம் எடுத்த இன்னொரு நண்பர் ஜே.பியா???????//

கரக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க... ஆபிஸ் வந்தாகூட நெட்ல பாக்குது அந்த ஆளு...

ரூபஸ் said...

// மங்களூர் சிவா said...
யாருப்பா அந்த சபதம் எடுத்த இன்னொரு நண்பர் ஜே.பியா???????//

கரக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க... ஆபிஸ் வந்தாகூட நெட்ல பாக்குது அந்த ஆளு...