Monday, November 12, 2007

எவ்வளவோ பண்றோம்.. அழகிய தமிழ்மகன்


தீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர் ஒருவருடன் அழகிய தமிழ்மகன் படம் பார்க்கப்போயிருந்தேன். இனிய தளபதி, இதய தளபதி, இளைய தளபதி, டாக்டர் விஜய் அப்புடின்னு பேர் போட்டதுலேருந்து படம் முழுக்க இந்தமாதிரி நிறைய காமெடிகள்.


ஓட்டப்பந்தயத்துல எல்லா மெடலையும் தானே வாங்குற வீரர் விஜய். ஒரு பந்தயத்துல, கூட ஓடுற ஒருத்தருக்காக ( ஸ்ரீமன்) முதலிடத்த விட்டுக்கொடுக்கிறார் விஜய். இத பார்த்தவுடனே உலகத்துலேயே இல்ல இல்ல தமிழ்நாட்டுலேயே பெரிய பணக்காரரோட பொண்ணு கதாநாயகிக்கு இவரு மேல காதல் வந்துடுது. . . .அதுக்காகத்தானே அந்த சீனே..


அப்புறம்தான் படத்தோட கதையே ஆரம்பிக்குது. பின்னாடி நடக்கப்போற சில விஷயங்கள் விஜய்க்கு, முன்னாடியே கண்ணாடி மாதிரி தெரியுது.. ( plz பொருத்துக்கங்க..). அதுனால விஜய் ரொம்ப டிஸ்டர்பு ஆகிறார். மனநல மருத்துவர் ருத்ரன் , இதுல கவலைப்படுறத்துக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்குள்ள ஒரு அபார சக்தி இருக்கு. இப்படி உங்களுக்கு தோன்ற விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா நடக்கும்னு சொல்லிறார். அதேபோல சக்திமானுக்கு (அதாங்க நம்ம விஜய் ) தோனுன ரெண்டு விஷயங்கள் உண்மையாவே நடந்துடுது...


இதுக்கிடையில விஜயோட காதல் வீட்டுக்கு தெரியவந்து எல்லாரும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாங்க. அந்தநேரத்துல விஜய்க்கு இன்னொரு விஷயம் தோனுது. அதாவது கதாநாயகிய இவரே கத்தியால குத்துறமாதிரி. இத யார்கிட்டேயும் சொல்லமுடியாம ஊரைவிட்டு மும்பைக்கு போறாரு.


அங்க போனவுடனே இவரு கண்ணையே இவரால நம்பமுடியல, ஆமாங்க.. அச்சு அசல் இவர்மாதிரியே இன்னொருத்தர், நடு ரோட்டுல பத்துபேர அடிச்சு, துவச்சுகிட்டு இருக்கிறார். ஒரிஜ்னல் டூப்ளீகேட்ட பிடிக்கிறத்துக்காக ஓடுறார், அதுக்குள்ள அவரு ஒரு கார்ல ஏறிப்போயிடுறார். நின்னுகிட்டு இருந்த ஒரிஜ்னல் மேல லாரி மோதிடுது.


அதுக்கப்புறம் நீங்க யூகிச்சமாதிரியே டூப்ளீகேட் சென்னைக்கு போறாரு. இரெயில்ல போகும்போது நமிதாகிட்ட ஜல்சா பண்ணிட்டு, அவுங்க முழிக்கிறத்துக்குள்ள காணாம போயிடுறார். இதெல்லாம் வச்சு இவரு ரவுடின்னு முடிவுக்கு வ்ந்துடாதீங்க. டூப்ளீகேட் பேங்குல வேலை பார்கிறாராம். இவரோட முக்கியமான டயலாக்தான் தலைப்புல நீங்க பார்த்தது, எவ்வளவோ பண்றோம் , இது பண்ணமாட்டோமா?

நாலு நாளா ஒரிஜ்னல தேடி அலைஞ்ச ஷிரேயா, டூப்ளீகேட்ட ஒரிஜ்னல்னு நினைச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறாங்க..( என்னவொரு டிவிஸ்டு பார்த்தீங்களா) ஒருஜ்னலோட டைரிய கண்டுபிடுச்ச டூப்ளீகேட் அவர மாதிரியே நடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தநேரத்துல மும்பையில ஒரு பெரிய ஆஸ்பத்திரியில ஓசியில வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காங்க ஒரிஜ்னல் விஜய்க்கு. டாக்டர் ஒருமாசத்துக்கு ரெஸ்டு எடுக்கனும், ரிஸ்கு எடுக்ககூடாதுன்னு சொல்றார், ஆனா ரிஸ்கு எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்கு சாப்புடுற மாதிரின்னு சொல்லிட்டு, ஒரிஜ்னல் சென்னைக்கு ஓடிவந்துறார்.
டூப்ளீகேட் ரொம்ப திறமையா அவருதான் ஒரிஜ்னல்னு எல்லாரையும் நம்பவைக்கிறார். அதனால ஒரிஜ்னல எல்லாரும் டூப்ளீகேட்டுன்னு நினைக்கிறாங்க. போதும் போதும் நிறுத்துன்னு சொல்றது காதுல விழுது. இருந்தாலும் விடமாட்டேன்.
கிளைமேக்ஸ்ல ஒரு சண்டை இருக்குதுங்க , ஒருத்தர் காலும் தரையில படாது, ஏர்லயே சண்டை. கடைசியா வாலி பார்முளாவுல டூப்ளீகேட், ஒரிஜ்னல் இல்லைங்குற உண்மையே ஷிரேயா கண்டுபிடிச்சுடுவாங்க. அந்தநேரத்துல கரக்ட்டா ஒரிஜ்னல் கண்ணாடியவுடைச்சிகிட்டு வந்துடுவார். ஒரிஜ்னலுக்கும், டூப்ளீகேட்டுக்கும் சண்டை நடக்கும்போது, டூப்ளீகேட் ஷிரேயாவ கத்தியால குத்திடுவாரோன்னு நாம யோசிக்க டைரக்டர் மாத்தி யோசிச்சிருக்கிறார். அந்த சஸ்பென்ச நீங்களே போய் பாருங்க...எது எப்படியோ படத்தோட கிளைமேக்ஸ் சுபம்ங்க..
பாடல்கள் நல்லாயிருக்கு.. ஆனா எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு..
சக்திமான் சூப்பரா டான்ஸ் ஆடுறாருங்க.. கட்டாயம் போய்ப்பாருங்க..
எவ்வளவோ பண்றோம்.. இது பண்ணமாட்டோமா அப்டிங்கிறீங்களா..
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...