Thursday, November 29, 2007

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்

150000 இது சென்செக்ஸ் புள்ளிகளின் எண்ணிக்கை அல்ல. வளரும் இந்தியாவின் வயிறு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. ஆம் ,இந்தியாவில் 1997 முதல் 2007 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 150000.

கடன் சுமை, நஷ்டம் இரண்டுமே இன்றைய விவசாயத்தின் முக்கிய அங்கங்களாகிவிட்டன.

எனது சொந்தவூர் நாகை மாவட்டத்தில் உள்ளது. பருவமழையும், காவிரியும்தான் இங்கு விவசாயத்திற்கான முக்கிய மூலங்கள். காவிரி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சில வருடங்களாக பருவமழையும் பொய்த்துவிட்டது. தேவையான நேரத்தில் ஒரு சொட்டு கூட பெய்வதில்லை. நன்றாக கதிர்வரும்போது பேய் மழை பெய்கிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்போது உள்ள முக்கிய பிரச்சினை விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வரமறுக்கிறார்கள் என்பதுதான். ஆம் கட்டிட வேலைகளுக்குச்சென்றால் இதைவிட இருமடங்கு வருமானம் கிடைப்பதால் விவசாய வேலைகளை தவிர்த்துவிடுக்கிறார்கள். எனவே பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாகவே இருக்கின்றன. ( யாராவது டாடா கம்பெனி காரங்ககிட்ட சொல்லுங்கப்பா..)..

இன்னும் கொஞ்சநாட்களில் அரிசி, தக்காளி, கீரை இதையெல்லாம் பெப்சி, கோக் மாதிரி புட்டிகளில் அடைச்சு வெளிநாட்டுகாரங்க நம்மகிட்ட விற்கப்போகிறார்கள்.

சரி இப்ப அதுக்கு என்னங்குறிங்களா? .. விக்ரமன் படத்துல வர்ர மாதிரி ஒரே பாட்டுல எல்லா தரிசு நிலத்தையும் விளைநிலமாகவோ.. இல்ல நஷ்டத்த லாபமாகவோ நம்மால மாத்தமுடியாது. ஏதோ நம்மாள முடிஞ்சது,

வெளியூர்ல, வெளிநாடுகள்ல நல்லா சம்பாதிக்கிற நாம , ஊர்ல இருக்குற நிலத்தையெல்லாம் வித்துடுங்கன்னு அப்பாக்கள டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.

விவசாயத்துக்காக கொஞ்சம் செலவு செய்யலாம்.
வேற ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்க..

Monday, November 26, 2007

சேதி தெரியுமா?

மலையாளத்துல சாக்லேட் னு ஒரு படம் வந்து சக்கைபோடு போட்டுகிட்டு இருக்குங்க. அந்த படத்துல ஒரு புது விஷயத்தை சொல்ராங்க.


அதாவது மகளீர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மட்டும் படிக்கலாம்னு சட்டம் இருக்குதாம்.( நம்ம நாட்டுலதான்...) அதுக்கு கல்லூரி முதல்வரோட அனுமதி மட்டும் இருந்தால் போதுமாம். இதுதான் படத்தோட கரு.


இந்தபுது சட்டத்தோட கருணையால பிரித்திவிராஜ்க்குஅந்த யோகம் கிடைக்குது.
அதுக்கப்ப்புறம் காலேஜ்ல நடக்குற விஷயங்ள், இத வச்சு திரைக்கதையை அமைச்சுருக்காங்க.. மொத்தத்துல படம் நல்லாயிருக்கு.

தமிழக இளைஞர்களின் எதிபார்ப்புக்கு ஏற்றமாதிரி ரெண்டு கதாநாயகிகள் நடிச்சிருக்காங்க. தமிழ்ல சீக்கிரம் எதிபார்க்கலாம். ஆயிரம் ஆண்கள் இருக்குற இடத்துல இருந்துறலாம், ஆனா ரெண்டு பொண்ணுங்க இருக்குகிற இடத்துல இருக்கமுடியாதுங்குறத ( சத்தியமா நான் சொல்லலைங்க..) பிரித்திவிராஜ் படம் முழுக்க அனுபவிக்கிறார்.

ம்ம்.. நமக்குத்தான் குடுத்து வைக்கல வரப்போற பசங்களுக்காவது பயன்படட்டுமேன்னு தான் உங்க எல்லார்கிட்டேயும் இத சோன்னேன்.
உண்மையாவே இப்படி ஒரு சட்டம் இருக்குதான்னு விசாரிச்சுப்பாருங்க..

Thursday, November 15, 2007

ஏமாற்றம்இந்தமுறையும்

ஏமாந்துபோனேன்,

அருகில் இருந்த ரயில்பெட்டி

நகர்ந்தபோது..

நகர்வது என்னுடையது

என்றெண்ணி..

Monday, November 12, 2007

எவ்வளவோ பண்றோம்.. அழகிய தமிழ்மகன்


தீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர் ஒருவருடன் அழகிய தமிழ்மகன் படம் பார்க்கப்போயிருந்தேன். இனிய தளபதி, இதய தளபதி, இளைய தளபதி, டாக்டர் விஜய் அப்புடின்னு பேர் போட்டதுலேருந்து படம் முழுக்க இந்தமாதிரி நிறைய காமெடிகள்.


ஓட்டப்பந்தயத்துல எல்லா மெடலையும் தானே வாங்குற வீரர் விஜய். ஒரு பந்தயத்துல, கூட ஓடுற ஒருத்தருக்காக ( ஸ்ரீமன்) முதலிடத்த விட்டுக்கொடுக்கிறார் விஜய். இத பார்த்தவுடனே உலகத்துலேயே இல்ல இல்ல தமிழ்நாட்டுலேயே பெரிய பணக்காரரோட பொண்ணு கதாநாயகிக்கு இவரு மேல காதல் வந்துடுது. . . .அதுக்காகத்தானே அந்த சீனே..


அப்புறம்தான் படத்தோட கதையே ஆரம்பிக்குது. பின்னாடி நடக்கப்போற சில விஷயங்கள் விஜய்க்கு, முன்னாடியே கண்ணாடி மாதிரி தெரியுது.. ( plz பொருத்துக்கங்க..). அதுனால விஜய் ரொம்ப டிஸ்டர்பு ஆகிறார். மனநல மருத்துவர் ருத்ரன் , இதுல கவலைப்படுறத்துக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்குள்ள ஒரு அபார சக்தி இருக்கு. இப்படி உங்களுக்கு தோன்ற விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா நடக்கும்னு சொல்லிறார். அதேபோல சக்திமானுக்கு (அதாங்க நம்ம விஜய் ) தோனுன ரெண்டு விஷயங்கள் உண்மையாவே நடந்துடுது...


இதுக்கிடையில விஜயோட காதல் வீட்டுக்கு தெரியவந்து எல்லாரும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாங்க. அந்தநேரத்துல விஜய்க்கு இன்னொரு விஷயம் தோனுது. அதாவது கதாநாயகிய இவரே கத்தியால குத்துறமாதிரி. இத யார்கிட்டேயும் சொல்லமுடியாம ஊரைவிட்டு மும்பைக்கு போறாரு.


அங்க போனவுடனே இவரு கண்ணையே இவரால நம்பமுடியல, ஆமாங்க.. அச்சு அசல் இவர்மாதிரியே இன்னொருத்தர், நடு ரோட்டுல பத்துபேர அடிச்சு, துவச்சுகிட்டு இருக்கிறார். ஒரிஜ்னல் டூப்ளீகேட்ட பிடிக்கிறத்துக்காக ஓடுறார், அதுக்குள்ள அவரு ஒரு கார்ல ஏறிப்போயிடுறார். நின்னுகிட்டு இருந்த ஒரிஜ்னல் மேல லாரி மோதிடுது.


அதுக்கப்புறம் நீங்க யூகிச்சமாதிரியே டூப்ளீகேட் சென்னைக்கு போறாரு. இரெயில்ல போகும்போது நமிதாகிட்ட ஜல்சா பண்ணிட்டு, அவுங்க முழிக்கிறத்துக்குள்ள காணாம போயிடுறார். இதெல்லாம் வச்சு இவரு ரவுடின்னு முடிவுக்கு வ்ந்துடாதீங்க. டூப்ளீகேட் பேங்குல வேலை பார்கிறாராம். இவரோட முக்கியமான டயலாக்தான் தலைப்புல நீங்க பார்த்தது, எவ்வளவோ பண்றோம் , இது பண்ணமாட்டோமா?

நாலு நாளா ஒரிஜ்னல தேடி அலைஞ்ச ஷிரேயா, டூப்ளீகேட்ட ஒரிஜ்னல்னு நினைச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறாங்க..( என்னவொரு டிவிஸ்டு பார்த்தீங்களா) ஒருஜ்னலோட டைரிய கண்டுபிடுச்ச டூப்ளீகேட் அவர மாதிரியே நடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தநேரத்துல மும்பையில ஒரு பெரிய ஆஸ்பத்திரியில ஓசியில வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காங்க ஒரிஜ்னல் விஜய்க்கு. டாக்டர் ஒருமாசத்துக்கு ரெஸ்டு எடுக்கனும், ரிஸ்கு எடுக்ககூடாதுன்னு சொல்றார், ஆனா ரிஸ்கு எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்கு சாப்புடுற மாதிரின்னு சொல்லிட்டு, ஒரிஜ்னல் சென்னைக்கு ஓடிவந்துறார்.
டூப்ளீகேட் ரொம்ப திறமையா அவருதான் ஒரிஜ்னல்னு எல்லாரையும் நம்பவைக்கிறார். அதனால ஒரிஜ்னல எல்லாரும் டூப்ளீகேட்டுன்னு நினைக்கிறாங்க. போதும் போதும் நிறுத்துன்னு சொல்றது காதுல விழுது. இருந்தாலும் விடமாட்டேன்.
கிளைமேக்ஸ்ல ஒரு சண்டை இருக்குதுங்க , ஒருத்தர் காலும் தரையில படாது, ஏர்லயே சண்டை. கடைசியா வாலி பார்முளாவுல டூப்ளீகேட், ஒரிஜ்னல் இல்லைங்குற உண்மையே ஷிரேயா கண்டுபிடிச்சுடுவாங்க. அந்தநேரத்துல கரக்ட்டா ஒரிஜ்னல் கண்ணாடியவுடைச்சிகிட்டு வந்துடுவார். ஒரிஜ்னலுக்கும், டூப்ளீகேட்டுக்கும் சண்டை நடக்கும்போது, டூப்ளீகேட் ஷிரேயாவ கத்தியால குத்திடுவாரோன்னு நாம யோசிக்க டைரக்டர் மாத்தி யோசிச்சிருக்கிறார். அந்த சஸ்பென்ச நீங்களே போய் பாருங்க...எது எப்படியோ படத்தோட கிளைமேக்ஸ் சுபம்ங்க..
பாடல்கள் நல்லாயிருக்கு.. ஆனா எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு..
சக்திமான் சூப்பரா டான்ஸ் ஆடுறாருங்க.. கட்டாயம் போய்ப்பாருங்க..
எவ்வளவோ பண்றோம்.. இது பண்ணமாட்டோமா அப்டிங்கிறீங்களா..
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...


Thursday, November 1, 2007

கடவுளின் சொந்த நாடு II

திருவனந்தபுரம் ஒரு மிதமான தட்பவெப்ப நிலை உள்ள ஒரு இடம். இங்க எப்ப மழை வரும் , எப்டி வரும் னு எலலாம் சொல்லமுடியாது ஆனா ஒரு வாரத்துக்கு ஏழு நாளாவது மழை பெய்யும்.


மழை மாதிரியே இங்க அடிக்கடி போராட்டங்களும் நடக்கும். ஸ்ட்ரைக் அப்புடிங்குற்த இவுங்க "ஹர்த்தால் " னு சொல்ராங்க. எல்லா கட்சிகளுமே ஹர்த்தால் பண்றத்துக்குன்னே தனி ஆளுங்கள அப்பாயின்ட் பண்ணி
வச்சுருக்காங்க.

அரசு தலைமைச்செயலகத்துக்கு வெளில டெண்டு போட்டு இந்த ஆளுங்க தயாரா இருப்பாங்க, ரெடின்னு சொன்னதும் ரொட மறிச்சு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க.


தமிழ் திரைப்படங்களுக்கு இங்க நல்ல வரவேற்பு இருக்கு. புதுப்படம் வந்தாக்கூட டிக்கெட் விலையெல்லாம் நியாயமாதான் இருக்கும். டாக்டர் விஜய் நடித்த போக்கிரி 100 நாள் ஓடிச்சுன்னா பாத்துகங்க.. கோயில் திருவிழாவிலெல்லாம் தெரு முழுக்க ஸ்பீக்கர் கட்டி , " டோலு டோலு தான் அடிகுறான்" னு பாட்டப்போட்டு நம்ம காது கிழியுற அளவுக்கு கத்த விடுவாங்க.

திருவனந்தபுரத்துல முக்கியமா பார்க்கவேண்டிய இடங்கள்,
சுவாமி பத்பநாபா கோவில். பேருந்து நிலையத்திலிருந்து 1/2 மைல் தொலைவில் இருக்குகிறது
கோவளம் கடற்கரை.
கேரளாவுல இருக்குற கடற்கரைகள் எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கும். இந்த கடற்கரைகளை பார்ப்பதற்காகத்தான் வெளிநாட்டினர் நிறைய பேர் வருகிறார்கள்.
சூரியக்குளியல், மணல்குளியல் எல்லாம் நிறைய பார்க்கலாம். இதே போல் சங்குமுகம், வேலி போன்ற கடற்கரைகளும் பார்க்கவேண்டிய இடங்கள்.
திருவனந்தபுரத்துல ஒரு மிருகக்காட்சி சாலையும் , அருங்காட்சியகமும் இருக்கு.
அரிய விலங்குகளை இங்கு பார்க்கலாம்.


திருவனந்தபுரத்துக்கு இன்னொரு சிறப்பு, இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம். இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பா என்ற இட்த்தில் உள்ளது. பெரும்பாலான விஞ்ஞானிகள், நம் அப்துல் கலாம் உட்பட இங்குதான் தன் பணியை தொடங்கியிருக்கிறார்கள்.
"நைக் அப்பாச்சி" என்ற ராக்கெட்டை தும்பாவிலிருந்து விண்ணில் செலுத்துவதற்காக தயார் செய்துகொண்டிருக்கும் படத்தைத்தான் அருகில் பார்க்கிறீர்கள்.கேரளாவுக்கு சுற்றுலா வந்தீங்கன்னா, கீழே இருக்குற சொற்கள் கொஞ்சம் உதவியா இருக்கும்.


தேனீர் (Tea) :சாயா

சாம்பார் : சாம்பார்
வத்தல்குழம்பு : தீயல்
ரசம் : இரெசம்
பருப்பு : பெருப்பு
மோர்குழம்பு : புளிசேரி.
ஊறுகாய் : அச்சாரம்.
போதும் : மதி
வெங்காயம் : உள்ளீ
சொல் : பறை
கூப்பிடுகிறேன :விளிக்கே
ஆள் : புள்ளி
வேலை : ஜோலி.
இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லுவேன். இன்னமும் தெரிஞ்சுக்கனும்னா என்கிட்ட டியுஷன் சேருங்க..

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், பொதுவா சொல்லனும்னா திருவனந்தபுரம் ஒரு அருமையான சுற்றுலாத்தலம். நேரம் கிடைக்கும்போது கடவுளிடைய சொந்த நாட்டுக்கு கண்டிப்பா வாங்க..