Friday, April 25, 2008

Inflation னும் உளுந்து வடையும்..

அம்மாவாசைக்கும் , அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கீறீர்களா?... அம்மாவாசைக்கும் , அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டோ இல்லையோ , உளுந்துவடைக்கும் பணவீக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு. அட ஆமாங்க... இவ்வளவு தூரம் வந்துட்டீங்க மேற்கொண்டு படிங்க...

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக விஷயம் தொடர்பாக சென்னைக்கு இரயிலில் புறப்பட்டேன். கேரளாவில் நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு விடைகளை சரிபார்க்கும் மாணவி, அவருடைய தந்தை, சென்னையில் இருக்கும் பிள்ளைகளைப்பற்றி சத்தமாய் பெருமை பேசிக்கொள்ளும் இரு வயதான நண்பர்கள், RAC யை Confirm செய்ய டிடியாரை எதிர்பார்த்திருக்கும் தம்பதியர், விடுமுறைக்காக சுற்றுலாச்செல்லும் குழந்தைகள் என பெட்டி முழுவதும் சுவாரசியங்கள் நிறைந்திருந்தன.

நாகர்கோயில் தாண்டியதும் ஒருவர் வடை, சமோசா போன்ற திண்பண்டங்களை சுமந்து வந்தார். கொஞ்சம் சூடாக இருந்ததால் எல்லாருமே வாங்கினார்கள். வயதான பெரியவர்களில் ஒருவர் , விற்பவரைப்பார்த்து " என்னப்பா வடை ரொம்ப சின்னதா இருக்கு, இதைப்போய் 2 ரூபாய் என்கிறாயே?" என்று ஆரம்பித்து வைத்தார். உடனே வாங்கிய அனைவரும் அதே புகாரை எழுப்பினார்கள். உண்மையிலேயே வடை சிரியதாகத்தான் இருந்தது.

நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு அந்த வியாபாரி " சார், உளுந்து 150 ரூபாய் விக்குது, எண்ணை எக்கச்சக்கமா ஏறி கெடக்குது, விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு. நானும் விலையை ஏத்தி விக்கலாம். ஆனா யாரும் வாங்க மாட்டாங்க.. அதனாலதான் சைஸ கொஞ்சம் கம்மி பண்ணீட்டேன்.. நாட்டோட நிலைமை அப்புடி சார்.." என்று விளக்கமளித்தப்படி பக்கத்து பெட்டிக்கு நகர்ந்தார்.
ஐயா பொருளாதார மேதைகளே ... ...எதாவது சீக்கிரம் பண்ணுங்க.. நிம்மதியா ஒரு வடை கூட வாங்கமுடியல...


Saturday, April 19, 2008

உன்னையெல்லாம் திருத்தமுடியாது...

கபில்தேவோட ICL க்கு போட்டியா, இந்திய கிரிக்கெட் வாரியம் IPL ன்னு பங்காளி சண்டையை ஆரம்பிச்சபோது அது ஒரு பெரிய விஷயமா தெரியல. ஆனா பெரிய பணக்காரர்களிடம் டீம்களை விற்று, விளையாடுபவர்களை ஏலம் விட்டபோது இது விளையாட்டல்ல , வியாபாரம் என்று புரிந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும், ரட்சகன் படத்துல நாகார்ஜுனுக்கு நரம்பு புடைக்குமே , அதுமாதிரி என்க்கும் என் நண்பர்களுக்கும் உடம்பெல்லாம் நரம்பு புடைத்தது. நாமெல்லாம் வாயை திறந்துகிட்டு டிவி பார்க்கிறதுனாலதான் இவங்கல்லாம் இப்படி பண்றாங்க என்று கொதித்தார் ஒரு நண்பர். IPL மேட்ச நாம யாரும் பார்க்ககூடாதுன்னு பேசி முடிவு பண்ணினோம். கிட்டத்தட்ட சபதம்ன்னு வச்சுக்கலாம்.

நாட்கள் ந....க.....ர்....ந்....த....ன. ஏப்ரல் 18 மாலை 6 மணிக்கெல்லாம் எல்லாரும் டிவி ரூமுக்கு வந்தாச்சு. "செம கலர்ஃபுல்லா இருக்குல்ல" இது ஒரு நண்பர். "என்ன கூட்டம் பார்த்தீங்களா" இது நான். " மேட்சு எப்போ ஆரம்பிக்கும் " இது கொதித்து எழுந்தவர். இப்படி நாங்களெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது , பின்புறத்திலிருந்து யாரோ என் தலையில் குட்டினார்கள். திரும்பிப்பார்ததால் சாட்சாத் என் மனசாட்சியேதான்.. உன்னையேல்லாம் திருத்தமுடியாது என்று மீண்டும் நறுக்கென்று என் தலையில் குட்டிவிட்டு அருகில் அமர்ந்து மேட்ச் பார்க்கத்தொடங்கியது என் மனசாட்சி...

Tuesday, April 8, 2008

Leave Letter

பள்ளிக்கூடத்த கட் அடிச்சிட்டு கிரிக்கெட் பார்கனும்னாலோ, இல்ல எங்கயாவது ஊர் சுத்தனும்னாலோ, இங்லீஷ் work book ல இருக்கிற ஜுரம் வந்த லீவ் லெட்டர காப்பியடிச்சு , அப்பா கையெழுத்தை, நண்பர்கள் யாரையாவது விட்டு போடவைச்சு , நல்லா படிக்கிற பையனா பார்த்து குடுத்துவிடுறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். ஆனா இப்ப இருக்குற பசங்க SMS லயே லீவ் லெட்டர் அனுப்பலாம். ஒருவேளை அனுப்புனா எப்டி இருக்கும்னு யோசிச்சப்ப தோனினதுதான் இந்த லெட்டர்..

Dear mam,
As am suffrg frm fevr , am unbl 2 atttd d class. i reqst u 2 grnt me leav fr 2 days.
thakg u,
urs obedntly,
M. Siva.
( என்ன முடியலயா.......)