Thursday, November 1, 2007

கடவுளின் சொந்த நாடு II

திருவனந்தபுரம் ஒரு மிதமான தட்பவெப்ப நிலை உள்ள ஒரு இடம். இங்க எப்ப மழை வரும் , எப்டி வரும் னு எலலாம் சொல்லமுடியாது ஆனா ஒரு வாரத்துக்கு ஏழு நாளாவது மழை பெய்யும்.


மழை மாதிரியே இங்க அடிக்கடி போராட்டங்களும் நடக்கும். ஸ்ட்ரைக் அப்புடிங்குற்த இவுங்க "ஹர்த்தால் " னு சொல்ராங்க. எல்லா கட்சிகளுமே ஹர்த்தால் பண்றத்துக்குன்னே தனி ஆளுங்கள அப்பாயின்ட் பண்ணி
வச்சுருக்காங்க.

அரசு தலைமைச்செயலகத்துக்கு வெளில டெண்டு போட்டு இந்த ஆளுங்க தயாரா இருப்பாங்க, ரெடின்னு சொன்னதும் ரொட மறிச்சு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க.


தமிழ் திரைப்படங்களுக்கு இங்க நல்ல வரவேற்பு இருக்கு. புதுப்படம் வந்தாக்கூட டிக்கெட் விலையெல்லாம் நியாயமாதான் இருக்கும். டாக்டர் விஜய் நடித்த போக்கிரி 100 நாள் ஓடிச்சுன்னா பாத்துகங்க.. கோயில் திருவிழாவிலெல்லாம் தெரு முழுக்க ஸ்பீக்கர் கட்டி , " டோலு டோலு தான் அடிகுறான்" னு பாட்டப்போட்டு நம்ம காது கிழியுற அளவுக்கு கத்த விடுவாங்க.

திருவனந்தபுரத்துல முக்கியமா பார்க்கவேண்டிய இடங்கள்,




சுவாமி பத்பநாபா கோவில். பேருந்து நிலையத்திலிருந்து 1/2 மைல் தொலைவில் இருக்குகிறது








கோவளம் கடற்கரை.
கேரளாவுல இருக்குற கடற்கரைகள் எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கும். இந்த கடற்கரைகளை பார்ப்பதற்காகத்தான் வெளிநாட்டினர் நிறைய பேர் வருகிறார்கள்.
சூரியக்குளியல், மணல்குளியல் எல்லாம் நிறைய பார்க்கலாம். இதே போல் சங்குமுகம், வேலி போன்ற கடற்கரைகளும் பார்க்கவேண்டிய இடங்கள்.




திருவனந்தபுரத்துல ஒரு மிருகக்காட்சி சாலையும் , அருங்காட்சியகமும் இருக்கு.
அரிய விலங்குகளை இங்கு பார்க்கலாம்.






திருவனந்தபுரத்துக்கு இன்னொரு சிறப்பு, இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம். இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பா என்ற இட்த்தில் உள்ளது. பெரும்பாலான விஞ்ஞானிகள், நம் அப்துல் கலாம் உட்பட இங்குதான் தன் பணியை தொடங்கியிருக்கிறார்கள்.
"நைக் அப்பாச்சி" என்ற ராக்கெட்டை தும்பாவிலிருந்து விண்ணில் செலுத்துவதற்காக தயார் செய்துகொண்டிருக்கும் படத்தைத்தான் அருகில் பார்க்கிறீர்கள்.



கேரளாவுக்கு சுற்றுலா வந்தீங்கன்னா, கீழே இருக்குற சொற்கள் கொஞ்சம் உதவியா இருக்கும்.


தேனீர் (Tea) :சாயா

சாம்பார் : சாம்பார்
வத்தல்குழம்பு : தீயல்
ரசம் : இரெசம்
பருப்பு : பெருப்பு
மோர்குழம்பு : புளிசேரி.
ஊறுகாய் : அச்சாரம்.
போதும் : மதி
வெங்காயம் : உள்ளீ
சொல் : பறை
கூப்பிடுகிறேன :விளிக்கே
ஆள் : புள்ளி
வேலை : ஜோலி.
இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லுவேன். இன்னமும் தெரிஞ்சுக்கனும்னா என்கிட்ட டியுஷன் சேருங்க..

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், பொதுவா சொல்லனும்னா திருவனந்தபுரம் ஒரு அருமையான சுற்றுலாத்தலம். நேரம் கிடைக்கும்போது கடவுளிடைய சொந்த நாட்டுக்கு கண்டிப்பா வாங்க..

6 comments:

மங்களூர் சிவா said...

//
சூரியக்குளியல், மணல்குளியல் எல்லாம் நிறைய பார்க்கலாம்
//
வறேன்யா சீக்கிரம்

//
தேனீர் (Tea) சாயா



சாம்பார் : சாம்பார்


வத்தல்குழம்பு : தீயல்


ரசம் : இரெசம்


பருப்பு : பெருப்பு


மோர்குழம்பு : புளிசேரி.

ஊறுகாய் : அச்சாரம்.

போதும் : மதி

வெங்காயம் : உள்ளீ

சொல் : பறை

கூப்பிடுகிறேன :விளிக்கே

ஆள் : புள்ளி

வேலை : ஜோலி.

இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லுவேன். இன்னமும் தெரிஞ்சுக்கனும்னா
என்கிட்ட டியுஷன் சேருங்க..
//
மனசிலாயி சேட்டா

எங்களுக்கெல்லாம் தலைவர் ரஜினியே முத்து படத்தில மலையாளம் கத்து குடுத்திருக்கார் அது போதும்.

ராதா செந்தில் said...

திருவனந்தபுரம் வர தூண்டுகிறது தங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

Deepa said...

ரொம்ப அருமையா திருவந்தபுரம் குறித்து எழுதியிருக்கீங்க

மறக்காம.. அங்கே இருக்கும் ஆற்றுகால்-பகவதி-க்ஷேத்திரமும் போய் பாருங்க... சாதாரண நாளில்.. அந்த கோயிலில் உள்ள அழகை ரசிக்கலாம்.. "பொங்காலை" எனப்படும் பண்டிகை நாளில்.. மக்கள் கூட்டத்தை பார்த்து பிரமிக்கவும் செய்யலாம்...

.. ஆங்.. சங்குமுகம்- கடர்கரைக்கும் போயிட்டு வாங்க.. ( பௌர்ணமியன்று சூப்பரா இருக்கும்).. கடலும்.. கடர்கரையில் இருக்கும் அம்மன்னும் அழகாய் தெரிவாள்

ரூபஸ் said...

//மங்களூர் சிவா said
வறேன்யா சீக்கிரம் ..//

curfew இன்னும் இங்க போடலை.. நிங்க வந்தீங்கன்னா அந்த குறையும் தீர்ந்துடும்...

சும்மா தமாசுக்கு..

வாங்க.. வாங்க...

ரூபஸ் said...

//ராதா செந்தில் said...
திருவனந்தபுரம் வர தூண்டுகிறது தங்கள் பதிவு. வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றி செந்தில்..

ரூபஸ் said...

//Deepa said...
ஆங்.. சங்குமுகம்- கடர்கரைக்கும் போயிட்டு வாங்க.. ( பௌர்ணமியன்று சூப்பரா இருக்கும்).. கடலும்.. கடர்கரையில் இருக்கும் அம்மன்னும் அழகாய் தெரிவாள்//

கட்டாயம் போய் பார்க்கிறேன்ங்க..
தங்கள் வருகைக்குக் நன்றி..