150000 இது சென்செக்ஸ் புள்ளிகளின் எண்ணிக்கை அல்ல. வளரும் இந்தியாவின் வயிறு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. ஆம் ,இந்தியாவில் 1997 முதல் 2007 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 150000.
கடன் சுமை, நஷ்டம் இரண்டுமே இன்றைய விவசாயத்தின் முக்கிய அங்கங்களாகிவிட்டன.
எனது சொந்தவூர் நாகை மாவட்டத்தில் உள்ளது. பருவமழையும், காவிரியும்தான் இங்கு விவசாயத்திற்கான முக்கிய மூலங்கள். காவிரி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சில வருடங்களாக பருவமழையும் பொய்த்துவிட்டது. தேவையான நேரத்தில் ஒரு சொட்டு கூட பெய்வதில்லை. நன்றாக கதிர்வரும்போது பேய் மழை பெய்கிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்போது உள்ள முக்கிய பிரச்சினை விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வரமறுக்கிறார்கள் என்பதுதான். ஆம் கட்டிட வேலைகளுக்குச்சென்றால் இதைவிட இருமடங்கு வருமானம் கிடைப்பதால் விவசாய வேலைகளை தவிர்த்துவிடுக்கிறார்கள். எனவே பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாகவே இருக்கின்றன. ( யாராவது டாடா கம்பெனி காரங்ககிட்ட சொல்லுங்கப்பா..)..
இன்னும் கொஞ்சநாட்களில் அரிசி, தக்காளி, கீரை இதையெல்லாம் பெப்சி, கோக் மாதிரி புட்டிகளில் அடைச்சு வெளிநாட்டுகாரங்க நம்மகிட்ட விற்கப்போகிறார்கள்.
சரி இப்ப அதுக்கு என்னங்குறிங்களா? .. விக்ரமன் படத்துல வர்ர மாதிரி ஒரே பாட்டுல எல்லா தரிசு நிலத்தையும் விளைநிலமாகவோ.. இல்ல நஷ்டத்த லாபமாகவோ நம்மால மாத்தமுடியாது. ஏதோ நம்மாள முடிஞ்சது,
வெளியூர்ல, வெளிநாடுகள்ல நல்லா சம்பாதிக்கிற நாம , ஊர்ல இருக்குற நிலத்தையெல்லாம் வித்துடுங்கன்னு அப்பாக்கள டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.
விவசாயத்துக்காக கொஞ்சம் செலவு செய்யலாம்.
வேற ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்க..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//
வெளியூர்ல, வெளிநாடுகள்ல நல்லா சம்பாதிக்கிற நாம , ஊர்ல இருக்குற நிலத்தையெல்லாம் வித்துடுங்கன்னு அப்பாக்கள டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.
//
Goog Message Keep it up.......
நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
Post a Comment