Sunday, January 20, 2008

தயக்கம்

"வாங்க வாங்க" என்று சிவாவை புன்னகையுடன் வரவேற்றாள் மலர்.

"அப்பா குளிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உட்காருங்க" என்று நாற்காலியை நகர்த்திக்கொடுத்தாள். இருவரும் அவரவர் வேலைகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
"ஒரு நிமிஷம். நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்ரேன்" சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மலர்.
குளித்துவிட்டு வந்த கணேசன், "என்ன சொல்லிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தார்.
"இன்னும் சொல்லல சார். இந்தாங்க இந்த மாத வாடகை " என்று நீட்டீனான்.

"ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. எப்போதான் சொல்லப்போறீங்க?"என்று கோபப்பட,
"ஏம்பா அவரை திட்ரீங்க" என்று சப்போட்டுக்கு வந்தாள் மலர்.

"அது ஒன்னுமில்லைமா எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன டிலீங் இருக்கு அதபத்திதான் கேட்டுக்கிட்டு இருந்தேன்" என்று சாமாளித்தார் கணேசன்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான் சிவா.

"நேர்ல முடியலைன்னா போன்லையாவது சொல்லித்தொலைங்க" என்று அலுத்துக்கொண்டார் கணேசன்.

சமையலறையிலிருந்து மனைவி கமலா அழைக்க , உள்ளே சென்றார் கணேசன்.

"என்னங்க சொல்லிட்டாராமா?" என்று ஆவலுடன் கேட்டார்.

"ஆமா மண்ணாங்கட்டி" சூடானார் கணேசன்.

"ஏன் இப்படி கோபப்படுறீங்க? அவருக்கு கொஞ்சம் தயக்கம் அதிகம்" இது கமலாவின் சமாதானம்.

"பின்ன என்னடி, நம்ம பொண்ண லவ் பண்றேன்னு நம்மகிட்ட சொல்லியே 6 மாசம் ஆகிடுச்சு. நம்மளும் சரின்னு சொல்லிட்டோம், அவுங்க வீட்டுலயும் சரின்னுட்டாங்க. ஆனாலும் நான்தான் என் காதல மலர்கிட்ட சொல்லுவேன்னு அடம்பிடிச்சவரு, இன்னும் சொல்லாம காலத்த கடத்தினா நாம என்னதான் பண்றது".

"சரி சரி விடுங்க. நீங்ககூடதான் ரெண்டு வருஷம் என்கிட்ட சொல்ரத்துக்கு பயந்தீங்க. ." என்று கமலா சிரிக்க , கணேசனுக்கு வெட்கம் படர்ந்தது முகத்தில்.

8 comments:

மே. இசக்கிமுத்து said...

காதலை புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

பாச மலர் / Paasa Malar said...

வித்தியாசமான காதலன்தான்...

மங்களூர் சிவா said...

அதெல்லாம் சரி அது என்ன சிவா ?

மங்களூர் சிவா said...

இருக்குடி மாப்பிளை உனக்கு.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Divya said...

வாவ், அழகான கற்பனை!
சரியான தருணத்தில் சொல்லாத காதல் , 'செல்லாது'போகலாம்!!

காதலை ஏற்றுக்கொண்ட அப்பா.....தன் மகளிடம் சொல்லிவிட்டாரா என்பதை அதட்டலுடன் கேட்பது கொஞ்சம் ஓவரா இருக்கிறமாதிரி இருக்கு!

காதை அவர் கூறி, மகள் மலரும் அதை ஏற்றுக்கொண்டால் அவர் மாப்பிள்ளை....அவரிடம் இப்படியா பேசுவது????

Anonymous said...

ராசா 2 மாசம் ஆச்சு பதிவு போட்டு. அக்கவுண்டை க்ளோஸ் பண்ண போறோம்

அட்மினிஸ்ட்ரேட்டர்
ப்ளாகர் டாட் காம்

ரூபஸ் said...

இசக்கிமுத்து, பாசமலர், திவ்யா மற்றும் சிவா சார் அனைவருக்கும் நன்றி..

ரூபஸ் said...

//மங்களூர் சிவா said...
அதெல்லாம் சரி அது என்ன சிவா ?//

எல்லாம் ஒரு பாசம்தான்.. இனிமே நான் எழுதப்போற எல்லா கதைக்குமே கதாநாயகன் நீங்கதான்...