வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் என்ற ஊர் உள்ளது. சுனாமி வந்து "விசாரித்துவிட்டுப்போன " பகுதிகளில் அதுவும் ஒன்று. அந்த ஊரில் புனித மைக்கேல் நடுநிலைப்பள்ளி என்ற பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் , பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள்.
மணி அடித்தவுடன் , முண்டியடித்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே, இந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சற்று வித்யாசப்படுகிறார்கள். பள்ளி முடிந்ததும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் ஒரு அருமையான கைத்தொழிலை மாணவர்கள் ஆர்வமுடன் செய்கின்றனர்.
நீங்கள் பார்க்கும் படங்கள், அவர்களின் கைவண்ணத்தில் உருவான வண்ண உறைகள் (covers) . உங்களைப்போலவே ஆச்சர்யப்பட்ட நானும், ஆசிரியர்களிடம் இதைப்பற்றி விசாரித்தேன். மிகவும் எளிய முறையில் இதை தயாரிக்கிறார்கள்.
முதலில், சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களை நீருடன் கலந்து ஒரு வாளியில் எடுத்துக்கொள்கின்றனர். பின் மூன்று வாளிகளில் சுத்தமான நீரை நிரப்பிக்கொள்கின்றனர். இங்க்பில்லர் உதவியுடன் வண்ணங்களை எடுத்து சொட்டு சொட்டாக நீர் மட்டும் உள்ள வாளிகளில் விடுகின்றனர். அந்த வண்ணங்கள் நீருக்குள் பரவும்போது , லேசாக ஊதி விடுகின்றனர். பின் சாதாரண வெள்ளை நிற உறைகளை எடுத்து, அந்த நீருள்ள வாளிகளில் அமிழ்த்தி வெளியே எடுக்கும்போது விதவிதமான, அழகழகான வண்ணங்கள் தோன்றுகின்றன. பின் வண்ண உறைகளை காற்றில் உலர்த்துகின்றனர்.
விளையாட்டுப்போல இருப்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் இதில் பங்கு கொள்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் சுனாமிப் பேரலையில் தங்கள் உறவுகளையும் , உடைமைகளையும் இழந்தவர்கள். மாந்தோப்புகளிலும், முந்திரிக்காடுகளிலும் அலைந்து திரிந்த இச்சிறார்களை, பள்ளிக்கு கொண்டுவந்து படிப்பின் மகத்துவத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் இந்த பள்ளி ஆசிரியர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த கவர்களை நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். முக்கியமாக விழாக்களில் பயன்படுத்தலாம். இந்த உறைகளின் விற்பனையின் மூலம் கிடைக்கும் செல்வம் இந்த மாணவச்செல்வங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது.
வலைப்பூ நண்பர்கள் இதை வாங்க விரும்பினால், அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்புக்கொள்ளலாம். அவரின் மின்னஞ்சல் முகவரி kaviraj94@rediffmail.com .
நம் வீடு மற்றும் அலுவலக விழாக்கள் , இந்த மாணாக்கரின் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் திகழட்டும்.
7 comments:
அவர்களை வைத்து ஆசிரியர்கள் செய்தது உறை,
அவர்களை வைத்து நீங்கள் செய்தது உரை,
இதை பல பெருக்கு நீ உரை,
பல பேரு நெஞ்சில் நீ உறை,
இத்துடன் முடிக்கிறேன் எனது உரை.
அவர்களை வைத்து ஆசிரியர்கள் செய்தது உறை,
அவர்களை வைத்து நீங்கள் செய்தது உரை,
இதை பல பெருக்கு நீ உரை,
பல பேரு நெஞ்சில் நீ உறை,
இத்துடன் முடிக்கிறேன் எனது உரை.
வாங்க நையாண்டி நைனா...
நீங்க ஒரு அடுக்குமொழி மைனா...
உங்க அளவுக்கு எனக்கு வரலங்க..
நன்றி நைனா..
மிகவும் உபயோகமான தகவல் டா.தொடர்ந்து அனுப்பு.
மின்னஞ்சலில் கருத்து தெரிவித்த ராம் மற்றும் சீனுவுக்கு நன்றி
So thoughtfull you are,
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்:))
நட்போடு
நிவிஷா.
நன்றி நிவிஷா..
Post a Comment