இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக விஷயம் தொடர்பாக சென்னைக்கு இரயிலில் புறப்பட்டேன். கேரளாவில் நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு விடைகளை சரிபார்க்கும் மாணவி, அவருடைய தந்தை, சென்னையில் இருக்கும் பிள்ளைகளைப்பற்றி சத்தமாய் பெருமை பேசிக்கொள்ளும் இரு வயதான நண்பர்கள், RAC யை Confirm செய்ய டிடியாரை எதிர்பார்த்திருக்கும் தம்பதியர், விடுமுறைக்காக சுற்றுலாச்செல்லும் குழந்தைகள் என பெட்டி முழுவதும் சுவாரசியங்கள் நிறைந்திருந்தன.
நாகர்கோயில் தாண்டியதும் ஒருவர் வடை, சமோசா போன்ற திண்பண்டங்களை சுமந்து வந்தார். கொஞ்சம் சூடாக இருந்ததால் எல்லாருமே வாங்கினார்கள். வயதான பெரியவர்களில் ஒருவர் , விற்பவரைப்பார்த்து " என்னப்பா வடை ரொம்ப சின்னதா இருக்கு, இதைப்போய் 2 ரூபாய் என்கிறாயே?" என்று ஆரம்பித்து வைத்தார். உடனே வாங்கிய அனைவரும் அதே புகாரை எழுப்பினார்கள். உண்மையிலேயே வடை சிரியதாகத்தான் இருந்தது.

நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு அந்த வியாபாரி " சார், உளுந்து 150 ரூபாய் விக்குது, எண்ணை எக்கச்சக்கமா ஏறி கெடக்குது, விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு. நானும் விலையை ஏத்தி விக்கலாம். ஆனா யாரும் வாங்க மாட்டாங்க.. அதனாலதான் சைஸ கொஞ்சம் கம்மி பண்ணீட்டேன்.. நாட்டோட நிலைமை அப்புடி சார்.." என்று விளக்கமளித்தப்படி பக்கத்து பெட்டிக்கு நகர்ந்தார்.
ஐயா பொருளாதார மேதைகளே ... ...எதாவது சீக்கிரம் பண்ணுங்க.. நிம்மதியா ஒரு வடை கூட வாங்கமுடியல...
18 comments:
இதை நம்ம பார்லிமேண்டில் விவாதம் செய்தால்...
அங்குள்ள அறிவு ஜீவிகள்.....உளுந்துக்கும் , எண்னைக்கும் மாற்று பொருள் கண்டுபிடிக்கணும் சொல்லுவாங்க
(Very Humorous guys!!!!)
அடடே இந்த வலை பதிவுக்கு பின்னாடி இப்படி ஒரு சோக கதை இருக்கும் னு நான் நினைக்கல ....
கண்டிப்பா இதபத்தி விஜயகாந்த் படம் எடுக்க சிபாரிசு பண்ணனும்
// JK said...
உளுந்துக்கும் , எண்னைக்கும் மாற்று பொருள் கண்டுபிடிக்கணும் சொல்லுவாங்க//
வாங்க jk . ஆமா ஆமா இப்படி கூட நடக்கலாம்.
// தேன்மொழி said
கண்டிப்பா இதபத்தி விஜயகாந்த் படம் எடுக்க சிபாரிசு பண்ணனும்//
வாங்க தேன்மொழி, அட கேப்டன் பிடிக்கவேண்டிய தீவிரவாதிகளே இன்னும் நிறைய பேர் இருக்காங்க.. அதனால அவரு இந்த சப்ஜெக்ட்டுக்கு ஒத்துக்குவாரா அப்புடிங்குறது யோசிக்கவேண்டிய விஷயம்.
தம்பி புலால் அவர்களே கடைசி வரைக்கும் அந்த வடைய நிங்க காசு கொடுத்து வாங்குனீங்களோ?
ஹாஹா....எப்படியும் நாளுக்குநாள் விலை ஏறத்தான் போகுது. அப்ப அந்த வடைக்காரர் சைஸ கொஞ்சம் கொஞ்சமா குறைச்சி கடைசில வடைன்னு பேர மட்டும் சொல்லி இரண்டு ரூபா கேப்பாரா?
///JK said...
இதை நம்ம பார்லிமேண்டில் விவாதம் செய்தால்...
அங்குள்ள அறிவு ஜீவிகள்.....உளுந்துக்கும் , எண்னைக்கும் மாற்று பொருள் கண்டுபிடிக்கணும் சொல்லுவாங்க
(Very Humorous guys!!!!)///
You are the one very Humorous.....
உளுந்து 150 ரூபாய் விக்குது, --அப்படியா?
இப்படியே அவர் குறைத்தார்ன்னா..
வடைக்குபதிலா சீடை விக்க வேண்டியதுதான்.. :(
// நிஜமா நல்லவன் said...
ஹாஹா....எப்படியும் நாளுக்குநாள் விலை ஏறத்தான் போகுது. அப்ப அந்த வடைக்காரர் சைஸ கொஞ்சம் கொஞ்சமா குறைச்சி கடைசில வடைன்னு பேர மட்டும் சொல்லி இரண்டு ரூபா கேப்பாரா?
//
வாங்க நல்லவரே?????... இது நல்ல ஐடியாவா இருக்கே!!!
நன்றி கோகுல்
காலத்திற்கு ஏற்ற கதை...விலைவாசி இன்று உலகப் பிரச்சனை..
நன்று !! தொடருங்கள்...
நன்றி ரகசிய சினேகிதி..
/
ஐயா பொருளாதார மேதைகளே ... ...எதாவது சீக்கிரம் பண்ணுங்க.. நிம்மதியா ஒரு வடை கூட வாங்கமுடியல...
/
do u want 2 rupees???
ஏம்பா ஜே.பி ரூபஸ்க்கு ஒரு ரெண்டு ருவா குடுப்பா!!
ரகசிய சிநேகிதி உங்க பேர் நல்லா இருக்கு!!!!!!!!!!
//மங்களூர் சிவா said...
/
ஐயா பொருளாதார மேதைகளே ... ...எதாவது சீக்கிரம் பண்ணுங்க.. நிம்மதியா ஒரு வடை கூட வாங்கமுடியல...
/
do u want 2 rupees???//
உங்க மெயிலுக்கு என்னோட அக்கவுன்ட் நம்பர் அனுப்புறேன். மறக்காம அனுப்புங்க..
ஆமாங்க!எங்க ஆபிஸ் கூட விலையை ஏத்த்ட்டு size ஐ maintain பண்றாண்ங்க...என்ன சொல்வது?
அமர்ரத்திய சென் ஐ தான் ஐடியா கேட்கணும்
ஆமா! நீங்க கடைசியில வடை வாங்கீனீங்களா இல்லையா?
// umakumar said...
அமர்ரத்திய சென் ஐ தான் ஐடியா கேட்கணும்//
வாங்க உமாகுமார். அமார்த்தியாசென் மாதிரி உள்ளவங்க எல்லாம் இந்தியாவுல இருக்க மாட்டேன்ங்குறாங்களே???
முதல்ல நான் தாங்க வடையை வாங்கினேன்...
Post a Comment