கல்லூரியின் இறுதியாண்டில் Project க்காக அப்பாவிடம் எவ்வளவு ...முடியுமோ அவ்வளவு சுரண்டிட்டு நண்பர்கள் எல்லாரும் சென்னையில், மூச்சு திணரும் திநகரில், குடியேறினோம். அருகருகெ உள்ள 3 ரூம்களில் 10 பேருக்குமேல் தங்கியிருந்தோம். ஒரு நாள் பக்கத்து ரூமிலிருந்த தெரிந்தவர் ஒருவர் உள்ளெ வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது புதுசா ஒரு ஆள் உள்ளே வந்தார், எங்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவரைப்பார்த்து சிரிக்க, நாங்களும் சிரித்தோம். வந்தவர் பக்கத்து ரூம்மெட்டின் ஓரமாக அமர்ந்து நாங்கள் பேசுவதை கவனித்துக்கோண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அந்த ஆள் என் நண்பனிடம் , boss உங்க மொபைல குடுங்க ஒரு மெசஜ் அனுப்பிட்டு தர்ரென்னு கேட்க , அவனும் குடுத்தான், மெசஜ அனுப்பிட்டு அந்த யோக்கியனும் மொபைல உடனே திருப்பிக் குடுத்தார். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் மறுபடியும் அதே அப்ளிக்கெஷன போட்டாரு அந்த யோக்கியவான், நம்மாளும் நம்பி குடுத்தான், கண் சிமிட்டுர நேரத்துக்குள்ள வெளில ஓடிப்போய் கதவ தாழ் போட்டுட்டு , செல்லை தூக்கிக்கிட்டு பறந்து போய்டாரு அந்த யோக்கியவான். பக்கத்து ரூம் பசங்க வந்து கதவ திறந்துவிட்டு போய் பார்த்தா திநகரில் ஒரே தல தலயா தெரியுது.. அவ்வளவு கூட்டம் .. திரும்பி வந்து எங்ககிட்ட பேசிக்கிட்டிருந்த பக்கத்து ரூம்காரரிடம் வந்தவன் உங்க friend ஆ ன்னு கேட்டோம், அவர் அதே கேள்வியை எங்கள பார்த்து கேட்டார். அப்பதான் தெரிஞ்சுது வந்தவன யாருக்கும் தெரியாதுன்னு. இதுல பெரிய காமெடி என்னன்னா, 2 மணி நெரம் கழிச்சு அந்த நம்பருக்கு போன் பண்ணினோம், ஹலோ அப்புடின்னதும், "boss தபபா எடுத்துக்காதீங்க, இந்த செல்ல நான் use பண்ணிகிறேன் நீங்க வேற வாங்கிக்கங்க" ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் , அந்த புண்ணியவான். சிரிக்கிறதா, அழுவுறதான்னு தெரியாம இப்படித்தான் நின்னான் எங்க friend
.
வடிவேலு சொல்லுறமாதிரி நூதனமாத்தான்யா திருடுராங்கெ.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ.... உங்களுக்கு இந்த நிலமை வராம கொஞ்சம் உஷாரா இருங்க...
Thursday, September 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//
Project க்காக அப்பாவிடம் எவ்வளவு ...முடியுமோ அவ்வளவு சுரண்டிட்டு
//
நீங்கல்லாம் projectக்குதான் சுரண்டியிருக்கீங்க ஆனா நாங்க attendance Fees லாம் வாங்கியிருக்கோம்
//
"boss தபபா எடுத்துக்காதீங்க, இந்த செல்ல நான் use பன்னிகிறேன் நீங்க வேற வாங்கிக்கங்க"
//
அவ்ளோ நல்லவனாய்யா அவன்.
போனை தொலைச்சுபுட்டு பேச்சை பாரு பேச்சை.
நாலு நாளைக்கு சோறு போட்டிருக்க கூடாது வீட்டுல
Post a Comment