எல்லாருக்கும் வணக்கம். எனக்கு தெரிந்ததா நான் நினைக்கிற ஒரு விஷயத்த உங்ககிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.
Microsoft OS ல CON அப்புடின்னு ஒரு Folder உருவாக்க முடியாதுன்னு எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க, அது உண்மைதான். ஏன் முடியாது என்றால்...
முதன்முதலில் Microsoft ன் DOS ( Disk Operating System) க்கான மென்பொருள் எழுதும்போது கணிப்பொறியின் பாகங்களை குறிப்பதற்காக சில பிரத்தியேகமான பெயர்களை( Reserved Names) பயன்படுத்தினர். உதாரணமாக தட்டச்சுப்பலகையும்( Keyboard), திரையும்( Screen) CON அதாவது Console எனவும், Printer, PRN எனவும் குறிக்கப்பட்டன.
நாம் DOS ல் புதிய கோப்பு (File) தொடங்குவதற்கு COPY CON என்ற கட்டளையை ( Internal Command) பயன்படுத்துவோம். இங்கு Copy என்பது நகல் எடுப்பதை குறிக்கிறது. Con என்பது தட்டச்சுப்பலகையையும் , திரையையும் குறிக்கிறது. நாம் தட்டச்சுப்பல்கையில் என்ன தட்டச்சு(Type) செய்கின்றோமோ அதை திரையில் எதிரொலிக்க (Echo) வேண்டும் என்பதே அந்த கட்டளையின் பொருள்.
CON என்ற பிரத்தியேக வார்த்தை இதுபோன்ற கட்டளைகளில் பயன்படுத்தப்படுவதாலும, ஏற்கனவே குறிக்கப்பட்டிருப்பதாலும்தான் நம்மால் CON என்ற பெயரில் புதிதாக ஒரு Folder ரை உருவாக்க முடியவில்லை என்பது எனது கருத்து.
Printer ரை குறிக்கும் PRN என்ற பெயரில் கூட புதிதாக ஒரு Folder ரை உருவாக்க முடியாது. முயற்சித்துப் பாருங்கள். தவறு ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.
No comments:
Post a Comment