Saturday, December 22, 2007

மசால் தோசை

ரத்தினம் நீண்ட நேரமாக சுந்தரத்தை கவனித்துக்கொண்டிருக்கிறார். ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை. சுந்தரத்தை இந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்த்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. மீண்டும் மீண்டும் அவன் அதே பொல செய்துகொண்டிருக்க பொருமையிழந்தவராய் எழுந்து அவனை சமயலறைக்கு அழைத்துச்சென்றார்.

"ஏம்பா சுந்தரம், ஏன் இப்படி பண்ற" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
"என்ன சார் , என்ன சொல்ரீங்கன்னு புரியலையே" என்று பணிவாக பதிலளித்தான்.

"பின்ன என்னப்பா சாப்பிட வர்ரவங்ககிட்ட எல்லாம் , நம்ம ஹோட்டலில் இல்லாத ஐட்டமா சொல்ர, ஏன் இப்படி பண்ற? உன்னையெல்லாம் வேலைக்கு சேர்த்தேன் பாரு என்னை சொல்லனும்" என்று பொரிந்துதள்ளினார்.


"சார் கோவிச்சுக்காதீங்க.. இதுல ஒரு வியாபார தந்திரம் இருக்கு. அதாவது , இப்ப நான் போய் சாப்பிட வர்ரவங்ககிட்ட என்ன வேணும் னு கேட்டா, அவுங்க ப்திலுக்கு என்ன இருக்குன்னு கேட்கிறாங்க,

இட்லி, தோசை, நெய்ரோஸ்ட், ஊத்தப்பம், பொங்கல், பூரி, சப்பாத்தி, வடை, போண்டா அப்புடின்னு மூச்சு விடாம சொல்லிமுடிச்சதுக்கப்புறம், அவுங்க மசால் தோசை இருக்கான்னு இல்லாத ஒன்ன கேட்கிறாங்க. சாப்பிட வர்ரதுல பத்து பேருக்கு ஏழு பேரு இப்படித்தான் இருக்காங்க.. அதனாலதான் நான் முதல்லையே இல்லாத ஐட்டத்த இருக்குறமாதிரி சொல்றேன். நான் சொல்லிமுடிச்சத்துக்கப்புறம் என்னோட லிஸ்ட்ல இல்லாதத கேட்பாங்க.. அப்ப நம்ம வேலை கொஞ்சம் ஈஸியாயிடுது."
என்று புன்னகையுடன் விளக்கமளித்தான்.

ம்ம்.. கெட்டிகாரன் என்று முதுகில் தட்டி கொடுத்தார் ரத்தினம்.

6 comments:

சுரேகா.. said...

நல்ல யோசனை..

படத்தோட போடுவது இன்னும் சிறப்பு

வாழ்த்துக்கள்..!

கலக்குங்க !

ரூபஸ் said...

// சுரேகா.. said...

நல்ல யோசனை..//
வருகைக்கு நன்றி சுரேகா..

மங்களூர் சிவா said...

hey enna aaachu??

masal dosa

next post

onion dosa vaa?????

avvvvvvvv

ரூபஸ் said...

வாங்க மா.. இல்ல சிவா சார் அடுத்தது ஜொள்ளு தோசை

மங்களூர் சிவா said...

ஒரு முடிவோடதான்யா திரியரீங்க எல்லாரும்!!!!!!!!!

அவ்வ்வ்வ்வ்

குட்டிபிசாசு said...

சாருக்கு நாலு இட்லி ரெண்டு வடை பார்சல்!!

:)

நல்லா எழுதுரிங்க! அடிக்கடி வாரேன்!