Saturday, January 12, 2008

புத்தாண்டு சபதம்

எல்லாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பத்து நாள் நான் ஊருக்கு போயிருந்தேன். ஊரில், ஒருநாள் என் மின்னஞ்சல் பெட்டியை பிரிக்கும்போது புத்தாண்டு சபதம் என்ற பெயரில் மங்களூர் சிவா (மாமா...ஆமா...ஆமா) ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். நானும் ஏதாவது ஜொள்ளு படமா இருக்கும்னு ஆசையா திறந்தேன். ஆனா புத்தாண்டு சபதம் எழுதுன்னு அன்புக்கட்டளை பிறப்பிச்சிருந்தார். என்னையும் மதிச்சு கேட்டதால இதோ எனது புத்தாண்டு சபதங்கள்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( சென்ற வருட அனுபவம்).

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மென்மேலும் உயரவேண்டும்.

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மங்களுர் மாமா படிச்சிட்டு பாராட்டுவார் ங்குற நம்பிக்கைதான்..)

4. படிப்பதற்கு சிரமப்படும் சகோதர, சகோதரிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

5. சென்றவருடம் செய்த தவறுகளை இந்த வருடம் செய்யக்கூடாது. புதிது புதிதாக ஏதாவது தவறு செய்ய வேண்டும்.

புதிதாக புத்தாண்டு சபதம் எழுத நான் அழைக்கும் நண்பர்கள்..

1 தொடுவானம் நம் உள்ளத்தில் (தீபா கோவிந்த்)

2. காலம் ( கோவிக்கண்ணன்)

3. குட்டிப்பிசாசு

4. பாலைத்திணை ( காயத்ரி)

எழுதப்போகும் நண்பர்களுக்கு முன்கூட்டியே எனது நன்றிகள்...

24 comments:

கோவி.கண்ணன் said...

//1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( சென்ற வருட அனுபவம்).//

ரூப்ஸ்,
இந்த அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். கையில் இருந்தால் கொடுக்கலாம். கடன் வாங்கிக் கொடுப்பது ரிஸ்க் தான். கடன் கொடுத்தவர்களிடமும் பிரச்சனை, சொந்தக்காரர்களிடமும் பிரச்சனை.

சபதத்தில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் !

//2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மென்மேலும் உயரவேண்டும்.//

மிக நல்ல சிந்தனை

//3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மங்களுர் மாமா படிச்சிட்டு பாராட்டுவார் ங்குற நம்பிக்கைதான்..)//

மங்களூர் சிவாவை இவா ன்னு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். எல்லோரும் அந்த உரிமையை எடுத்துக் கொண்டால் பாவம் அவர் என்ன செய்வார். அவ்வ்வ்வ்வ்வ்வ்
:))

மங்களூர் சிவா said...

நல்ல வேளை ஜனவரி முடியறதுக்குள்ள எழுதினியே அதுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்

மங்களூர் சிவா said...

//
நானும் ஏதாவது ஜொள்ளு படமா இருக்கும்னு ஆசையா திறந்தேன். ஆனா புத்தாண்டு சபதம் எழுதுன்னு அன்புக்கட்டளை பிறப்பிச்சிருந்தார்.
//
எல்லா மெயிலும் அப்பிடியேவா அனுப்புவாக எதோ ஒரு மெயில் இப்பிடியும்தான் இருக்கும்

மங்களூர் சிவா said...

//
கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது.
//
அதேமாதிரி ஜாமீனும் யாருக்கும் போடக்கூடாது எவ்வளவு நண்பனா இருந்தாலும்.

மங்களூர் சிவா said...

//
திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மென்மேலும் உயரவேண்டும்.
//
All the best டா கண்ணா சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும்.

மங்களூர் சிவா said...

//
படிப்பதற்கு சிரமப்படும் சகோதர, சகோதரிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும்.
//
பக்கத்து வீட்டு சேச்சிக்கு டியூஷன் எடுக்கிறேன்னு கெளம்பிறாத கட்டிருவானுங்க 'டின்'னு

மங்களூர் சிவா said...

//
எதை எழுதினாலும் மங்களுர் மாமா படிச்சிட்டு பாராட்டுவார் ங்குற நம்பிக்கைதான்..
//
யானையின் பலம் தும்பிக்கை
மனிதனின் பலம் நம்பிக்கை

(இது எதோ ஒரு படத்துல தனுஷ் சொல்லுவார்)

மங்களூர் சிவா said...

//
சென்றவருடம் செய்த தவறுகளை இந்த வருடம் செய்யக்கூடாது. புதிது புதிதாக ஏதாவது தவறு செய்ய வேண்டும்.
//
ஆமா போன வருசம் JP விழுந்து வாரினான் இந்த வருசம் நீ விழுந்து வாரு

அடிங்க!!

மங்களூர் சிவா said...

அப்பாலிக்கா வரேன்

வர்ட்டா..

cheena (சீனா) said...

நண்பரே, தங்களின் முதல் நான்கு சபதங்களை, தங்களின் அனுமதியுடன், நானு எடுத்துக் கொள்கிறேன். காரணம் - எனக்கும் இவை பொருந்துவதால். ஐய்ந்தாவது மொக்கைச் சபதத்திற்குப் பதிலாக, எனக்குப் பிடித்த, தங்களின் பொன்மொழியை - சபதமாக - மற்றவருக்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நானும் மகிழ வேண்டும் என்ற சபதத்தை எடுத்துக் கொள்கிறேன்.

இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்.

ரூபஸ் said...

//கோவி.கண்ணன் said
சபதத்தில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் //

நன்றி கண்ணன்..

//மங்களூர் சிவாவை இவா ன்னு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்//

இவா அப்புடின்னா இனிய வார்த்தைகள் பேசுபவர் என்று பொருள். இப்ப சொல்லுங்க கண்ணன் , அவரை இவா ன்னு
கூப்பிடலாமா? கூடாதா..

ரூபஸ் said...

// மங்களூர் சிவா said...
நல்ல வேளை ஜனவரி முடியறதுக்குள்ள எழுதினியே அதுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்//

ஹலோ .. டிசெம்பர் மாசம் வரைக்கும் கூட எழுதலாம்..

ரூபஸ் said...

// மங்களூர் சிவா said...
//
திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மென்மேலும் உயரவேண்டும்.
//
All the best டா கண்ணா சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும்.//

வாழ்த்து சொல்ரேன்ங்குற பேர்ல சாபம் குடுக்குறீங்களா?...

ரூபஸ் said...

நன்றி சீனா அவர்களே!

நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த புத்தாண்டு சபதங்களை நிறைவேற்றுவோம்..

ரூபஸ் said...

// மங்களூர் சிவா said...
//
படிப்பதற்கு சிரமப்படும் சகோதர, சகோதரிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும்.
//
பக்கத்து வீட்டு சேச்சிக்கு டியூஷன் எடுக்கிறேன்னு கெளம்பிறாத கட்டிருவானுங்க 'டின்'னு//

"டின்" க்கு பதிலா அந்த பொண்ணையே கட்டிவச்சாங்கன்னா நல்லாயிருக்கும்..
முயற்சி பண்றேன்..

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

மங்களூர் சிவாவை இவா ன்னு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். எல்லோரும் அந்த உரிமையை எடுத்துக் கொண்டால் பாவம் அவர் என்ன செய்வார். அவ்வ்வ்வ்வ்வ்வ்
//
அண்ணே உங்க பாசம் தொண்டைய அடைக்குதுண்ணே!!!

மங்களூர் சிவா said...

//
cheena (சீனா) said...
நண்பரே, தங்களின் முதல் நான்கு சபதங்களை, தங்களின் அனுமதியுடன், நானு எடுத்துக் கொள்கிறேன்.
//
அப்பிடி ச்சும்மா எல்லாம் எடுத்துக்க முடியாது பேமெண்ட் இங்க பண்ணனும்!!!

மங்களூர் சிவா said...

//
ரூபஸ் said...

இவா அப்புடின்னா இனிய வார்த்தைகள் பேசுபவர் என்று பொருள். இப்ப சொல்லுங்க கண்ணன் , அவரை இவா ன்னு
கூப்பிடலாமா? கூடாதா..
//
யோவ் ஆப்பா !!!!

எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்கமாட்டோமா!!!!!

மங்களூர் சிவா said...

//
ரூபஸ் said...
// மங்களூர் சிவா said...
நல்ல வேளை ஜனவரி முடியறதுக்குள்ள எழுதினியே அதுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்//

ஹலோ .. டிசெம்பர் மாசம் வரைக்கும் கூட எழுதலாம்..
//
டிசம்பர் வரைக்கும் எழுதினா அது புத்தாண்டு சபதமில்லை 'மெத்தனமான' ஆண்டு சபதம்!

மங்களூர் சிவா said...

//
ரூபஸ் said...
// மங்களூர் சிவா said...
//
திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மென்மேலும் உயரவேண்டும்.
//
All the best டா கண்ணா சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும்.//

வாழ்த்து சொல்ரேன்ங்குற பேர்ல சாபம் குடுக்குறீங்களா?...
//
இது சாபமா!?!?!!?

சரி நல்லா இருய்யா !!

மங்களூர் சிவா said...

//
ரூபஸ் said...

நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த புத்தாண்டு சபதங்களை நிறைவேற்றுவோம்..
//
வேற எதுக்கோ அக்ரிமெண்ட் போடறாமாதிரியே ஒரு ப்பீலிங் ப்பீலிங்

மங்களூர் சிவா said...

//
ரூபஸ் said...

"டின்" க்கு பதிலா அந்த பொண்ணையே கட்டிவச்சாங்கன்னா நல்லாயிருக்கும்..
முயற்சி பண்றேன்..
//

சில சமயம் அப்படியும் நடக்கும் அந்த பொண்ணு கோவைசரளா மாதிரி இருந்தால்!!

ரூபஸ் said...

அப்பப்பா...இந்த சிவா சாருக்கு பதில் போடுறத்துக்குள்ள ....

முடியல......

சிவா சார் உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி...

cheena (சீனா) said...

நண்பரே !! என்னுடைய பதிவினைப் பார்க்க அழைக்கிறேன்.

http://cheenakay.blogspot.com/2008/01/blog-post_15.html