Monday, January 14, 2008

பொங்கலோ .. பொங்கல்..

"பொங்கல் பொங்கி வழியும் காட்சியோடு..பொங்கல் தினச்சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ... என்று சொல்லும்போது அடுத்தச்சேனலுக்கு மாற்றிவிடுகிறார் நண்பர். இப்படி ஒவ்வொரு சேனலாக பார்த்துமுடிப்பதற்குள் இரவு வந்துவிட்டது.. பிறகு என்ன வழக்கம்போல் தூக்கம்தான்.."

ச்சே .. கனவுகூட தூங்குறமாதிரியே வருது.. ஆமாங்க மேல இருக்குறது நாளைக்கு நடக்கப்போகும் விஷயங்கள். எங்கள் அலுவலகத்தில் எல்லோருக்கும் சேர்ந்தார்போல் விடுமுறை கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் தூங்கியே பொழுதை கழித்துவிடுவோம்..


ஆனா பொங்கல் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளோம்.. நாளைக்கு நாகர்கோவில் அருகில் உள்ள பத்மநாபா அரண்மனையையும் , சுற்றியுள்ள அருவிகளையும் பார்க்கப்போகிறோம்.

மக்களே!!! நீங்களும் சின்னத்திரையில சிக்கிடாம நல்லபடியா பொங்கலை மனிதர்களோடும், கால்நடைகளோடும் கொண்டாடுங்க.. கரும்பு மற்றும் காய்கரிகளை நிறைய வாங்கி, விவசாயிகளுக்கு உதவி செய்யுங்க.. ஊருக்கு வந்திருக்கிற நண்பர்களை பார்த்து நலம் விசாரிங்க.. கோவில்களுக்கு போங்க..
தைமகளின் வருகை, அனைவருக்கும் இனிப்பையும் , இன்பத்தையும் கொண்டுவரட்டும்..
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...




5 comments:

Divya said...

நீங்க டி.வி பார்க்காமல் பொங்கல் கொண்டாடினீங்களா ரூப்ஸ்?

என் பதிவில் பின்னூட்டமிட்டதின் வழியாக உங்க வலைத்தளத்திற்கு வந்தேன்,
ரொம்ப எளிமையா....அழகான பேச்சு தமிழில் எழுதுறீங்க,
உங்கள் பதிவுகளை படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்,

ரூபஸ் said...

வருகைக்கு நன்றி திவ்யா..

ஆமாங்க பொங்கல் அன்று நான் டி.வி பார்ககலங்க. திருவனந்தபுரத்திலிருந்து, நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்த்துவிட்டு திரும்பினோம்..

மங்களூர் சிவா said...

சுற்றுலா பிரயோஜனமா இருந்ததா?

மங்களூர் சிவா said...

கண்ணுக்கு குளிர்ச்சியா எதுவும்??

மங்களூர் சிவா said...

சரி சரி அப்புறமா விவரமா மெயில் அனுப்பு.