



தீதும் நன்றும் பிறர்தர வாரா..
நீங்கள் பார்க்கும் படங்கள், அவர்களின் கைவண்ணத்தில் உருவான வண்ண உறைகள் (covers) . உங்களைப்போலவே ஆச்சர்யப்பட்ட நானும், ஆசிரியர்களிடம் இதைப்பற்றி விசாரித்தேன். மிகவும் எளிய முறையில் இதை தயாரிக்கிறார்கள்.
முதலில், சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களை நீருடன் கலந்து ஒரு வாளியில் எடுத்துக்கொள்கின்றனர். பின் மூன்று வாளிகளில் சுத்தமான நீரை நிரப்பிக்கொள்கின்றனர். இங்க்பில்லர் உதவியுடன் வண்ணங்களை எடுத்து சொட்டு சொட்டாக நீர் மட்டும் உள்ள வாளிகளில் விடுகின்றனர். அந்த வண்ணங்கள் நீருக்குள் பரவும்போது , லேசாக ஊதி விடுகின்றனர். பின் சாதாரண வெள்ளை நிற உறைகளை எடுத்து, அந்த நீருள்ள வாளிகளில் அமிழ்த்தி வெளியே எடுக்கும்போது விதவிதமான, அழகழகான வண்ணங்கள் தோன்றுகின்றன. பின் வண்ண உறைகளை காற்றில் உலர்த்துகின்றனர்.
விளையாட்டுப்போல இருப்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் இதில் பங்கு கொள்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் சுனாமிப் பேரலையில் தங்கள் உறவுகளையும் , உடைமைகளையும் இழந்தவர்கள். மாந்தோப்புகளிலும், முந்திரிக்காடுகளிலும் அலைந்து திரிந்த இச்சிறார்களை, பள்ளிக்கு கொண்டுவந்து படிப்பின் மகத்துவத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் இந்த பள்ளி ஆசிரியர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த கவர்களை நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். முக்கியமாக விழாக்களில் பயன்படுத்தலாம். இந்த உறைகளின் விற்பனையின் மூலம் கிடைக்கும் செல்வம் இந்த மாணவச்செல்வங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது.
வலைப்பூ நண்பர்கள் இதை வாங்க விரும்பினால், அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்புக்கொள்ளலாம். அவரின் மின்னஞ்சல் முகவரி kaviraj94@rediffmail.com .
நம் வீடு மற்றும் அலுவலக விழாக்கள் , இந்த மாணாக்கரின் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் திகழட்டும்.
என் செல்ல நாய்குட்டியை காட்டிலும்
அதிகமாய் வாலாட்டுகின்றன....... உன் நினைவுகள்
(சத்தியமா நான் எழுதல..)